தமிழ் புலமையில் பிச்சு உதறும் ஹர்பஜன்சிங்.. விஜய்சேதுபதி, வெற்றிமாறன், பாண்டியராஜனுக்கு நன்றி ட்விட்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி உள்ளார். இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள பிரண்ட்ஷிப் படம் மூலமாக ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா நடித்துள்ளார்.

நடிகை லாஸ்லியாவும் இப்படம் மூலமாகவே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் பாடகர் தேவாவுடன் இணைந்து நடிகை லாஸ்லியா இப்படத்தில் பாடியுள்ள அடிச்சி பறக்கவிடுமா பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தமிழ் மீது அதிக பற்று கொண்டுள்ள ஹர்பஜன் சிங் சமீபகாலமாகவே தமிழில் தான் அவரது ட்விட்டரில் பதிவுகளை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பத்து நிமிட ஸ்னீக் பீக் வீடியோவை பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன் பாண்டியராஜன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதற்கு தன்னுடைய ட்விட்டர் மூலமாக தமிழில் ஹர்பஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

harbhajan-singh-twit
harbhajan-singh-twit1

இதில் விஜய் சேதுபதியை ‘ஒரே வாரத்தில் மூன்று படம் கொடுக்கும் விஜய் சேதுபதி, ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி’ என்று ஹர்பஜன் சிங் விஜய் சேதுபதியை புகழ்ந்துள்ளார். அத்துடன் பாண்டியராஜன் மற்றும் வெற்றி மாறனையும் அதேபோல் புகழ்ந்துள்ள ட்விட்டர் பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

harbhajan-singh
harbhajan-singh-twit2

மேலும் இந்தப் பதிவிற்கு எக்கச்சக்கமான லைக்குகளும் குவிந்து வருகிறது. ஹர்பஜன் சிங் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பிளாக் சீப் என்ற யூடியூப் சேனலில் ஒளிபரப்பான வெப் தொடர் ஒன்றில் திருவள்ளுவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

harbhajan-singh-twit
harbhajan-singh-twit3