வெளிநாட்டில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய 3 கிரிக்கெட் வீரர்கள்!

இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு பணம் காய்க்கும் விளையாட்டு. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் முதல் இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரர்கள் இந்தியாவில் உள்ளனர்.

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் அனைவரின் கனவும் எப்படியாவது இந்திய அணியில் இடம் பெற்று விட வேண்டும் என்பதுதான். ஆனால் அனைவராலும் அது இயலாது. ஆகையால் எங்கு திறமையை ஆதரிக்கிறார்களோ அங்கு சென்று விளையாட விரும்புகிறார்கள். அப்படி வெளிநாட்டில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் விவரம்.

அசோக் காந்தோத்ரா: இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் பிரேசில் நாட்டில் பிறந்தவர். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 54 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இன்று வரை பிரேசிலில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய ஒரே வீரர் இவர் மட்டுமே.

Ashok-Cinemapettai.jpg
Ashok-Cinemapettai.jpg

ராபின் சிங்: தென் அமெரிக்காவிற்குப் பக்கத்தில் உள்ள டிரினிடட் & டோபாகோ தீவை சேர்ந்தவர் ராபின் சிங். இந்திய அணிக்காக விளையாடிய ராபின் சிங் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் மட்டுமின்றி சிறந்த பில்டர். இதுவரை 136 ஒருநாள் போட்டிகள் விளையாடி 2336 ரன்களையும் 69 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

Robin-Cinemapettai.jpg
Robin-Cinemapettai.jpg

லால் சிங்: 1909 ஆம் ஆண்டு மலேசிய கோலாலம்பூரில் பிறந்த லால் சிங் 32 முதல் தர போட்டிகளில் விளையாடி 1123 ரன்களையும் 23 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடியுள்ளார். 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான இவர் 43 ரன்களை அடித்தார்.

Lalsingh-Cinemapettai.jpg
Lalsingh-Cinemapettai.jpg

Next Story

- Advertisement -