வெளிநாட்டு மாப்பிள்ளையை வளைத்துப் போட்ட பிரபல நடிகைகள்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட்னா சும்மாவா!

இந்திய சினிமாவில் பல நடிகைகள் இந்திய பிரபலங்களை விட்டு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில் யார் யார் இடம் பெற்றுள்ளனர் என்பதை பற்றி பார்ப்போம்.

ஸ்ரேயா சரண்: எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரேயா சரண் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு விஜய் மற்றும் தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார். ஆனால் இவர் ரஷ்யாவைச் சேர்ந்த Andrei Koscheev ​என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

shriya saran family
shriya saran family

மாதவி: புதிய தோரணங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாதவி. அதன்பிறகு ராஜபார்வை, தம்பிக்கு எந்த ஊரு மற்றும் காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். வெளிநாட்டைச் சேர்ந்த Ralph Sharma என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

madhavi family
madhavi family

பிரியங்கா சோப்ரா: விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு பெரிய அளவில் தமிழ் படங்கள் எதுவும் நடிக்காமல் ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தி பல படங்கள் நடித்து வெற்றி கண்டார். பிரியங்கா சோப்ராவும் வெளிநாட்டைச் சேர்ந்த Nick Jonas என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

priyanka chopra family
priyanka chopra family

ப்ரீத்தி ஜிந்தா: தமிழில் ‘உயிரே’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரீத்தி ஜிந்தா. இப்படத்தில் இடம்பெற்ற தக்க தைய தையா என்ற பாடல் இன்று வரைக்கும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. தில் சே என்ற பெயரில் ஹிந்தியில் முதலில் வெளியாகி அதன் பிறகே தமிழில் உயிரே என்று டப்பிங் செய்து வெளியிட்டனர். ப்ரீத்தி ஜிந்தா வெளிநாட்டை சேர்ந்த Gene Goodenough என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

preity zinta family
preity zinta family

ராதிகா ஆப்தே: தமிழ் சினிமாவில் தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன் பிறகு ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் தலைவருக்கு ஜோடியாக நடித்து  பிரபலமடைந்தார். ராதிகா ஆப்தே வெளிநாட்டைச் சேர்ந்த Benedict Taylor என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

radhika apte family
radhika apte family
- Advertisement -