ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அசுரவேகத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. அடுத்த வெற்றியை நோக்கி கமல்

ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஒரு சில பிரச்சனையால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்க தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் கமல், வரும் செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு விடுகின்றனர். மேலும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று ஆங்கில புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா திட்டமிட்டிருக்கிறது.

இதனால் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் அத்தனை பிரச்சினைகளும் கடந்த சில மாதங்களாக தீர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக் ஒப்பந்தமாகி சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

ஆகையால் விவேக் காட்சிகளை அப்படியே முடித்து விடலாமா அல்லது அவருக்கு பதிலாக நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் லைக்கா புரோடக்சன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனிடம், உதயநிதி இந்தியன் 2 திரைப்படத்திற்கு பண தேவை ஏற்பட்டால் தான் கொடுக்க தயாராக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியன் 2 படத்தின் திரையரங்கு உரிமையை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக வாங்கி கொள்ளவதாகவும், சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்து வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  எனவே எந்த பண பிரச்சனைக்கும் வேலையில்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பு சிறப்பாக துவங்கவுள்ளது.

இதனால் இந்தியன்2 படப்பிடிப்பு எப்போது துவங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தொடர்ந்து மூன்று மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி புத்தாண்டிற்கு திரைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக படக்குழுவினர்கள் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News