ரிலீசுக்கு முன்பே உயிர் நீத்த 2 ஜாம்பவான்கள்.. பெயரை நிலைக்க வைக்க வரும் இந்தியன் 2

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இதன் முதல் பாகம் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

பல வருடங்களாக விபத்து, மன கசப்பு என இழுத்தடிக்கப்பட்டு வந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவுரும் கட்டத்தில் இருக்கிறது. இப்படி பெரும் ஆர்வத்தை தூண்டி வரும் இந்த படத்தில் மறைந்த நகைச்சுவை ஜாம்பவான்களான விவேக் மற்றும் மனோபாலா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்களாம்.

Also read: ஐந்து ரூபாய்க்கு நடிக்க வந்த டாப் நடிகர், ஆணவத்தில் ஆடிய கமல்.. உண்மையை புட்டு புட்டு வைத்த பாரதிராஜா

இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் அவர்களுடைய கதாபாத்திரம் பற்றி யாருக்கும் தெரியாது. அந்த வகையில் கமலுடன் இணைந்து நடிக்காத விவேக் இப்படத்தின் மூலம் முதன்முறையாக அவருடன் கைகோர்த்தார். ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவர் நம்மை விட்டு சென்று விட்டார்.

அதேபோன்று மனோபாலாவும் சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவின் காரணமாக உயிர் நீத்தார். இது ஒட்டுமொத்த படக்குழுவையும் இப்போது அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் அவர்களுடைய காட்சி படத்தில் இடம்பெறுமா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால் அவர்களுடைய காட்சியை எக்காரணம் கொண்டும் பட குழு நீக்கும் முடிவில் இல்லை.

Also read: மறுபடியும் அடித்துக் கொள்ளும் ரஜினி கமல் ரசிகர்கள்.. சும்மா கடந்த சங்கை ஊதிவிட்ட லோகேஷ்

ஏனென்றால் இந்தியன் 2 அவர்கள் பேர் சொல்லும் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் இதுதான் கடைசி படம் என்று தெரியாமலேயே இதில் தங்கள் முத்திரையை பதிக்கும் படியான ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு சென்றுள்ளார்களாம்.

இது ரசிகர்களை கலங்க வைத்தாலும் அவர்களின் பெயரை நிலைக்க வைக்க வரும் இப்படத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இதுவே பெரும் ஆவலை உண்டாக்கிய நிலையில் அடுத்த வருடம் இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அப்பாவை சந்தோஷப்படுத்திய மகன்.. மனதை கனக்க வைத்த மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்

- Advertisement -