இந்தியன் 2 விவகாரத்தில் லைக்கா எடுத்த அதிரடி முடிவு. கமலுக்கே கல்தாவாம்!

பிரம்மாண்ட படத்திற்கும் கமலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது போல. ஒவ்வொரு முறையும் கமல்ஹாசனின் பிரம்மாண்ட படங்கள் பல்வேறு விதமான சர்ச்சைகளை சந்தித்து கைவிடும் சூழ்நிலை கூட ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மருதநாயகம் படத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

தற்போது அதே வரிசையில் சங்கர், கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படம் இணைந்து விடுமோ என கவலையில் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த அளவுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு தற்போது தயாரிப்பாளர் முதல் இயக்குனர்கள் வரை படத்தை கண்டும் காணாமல் இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

இந்தியன் 2 படம் ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு வகையான பிரச்சினைகள் எழுந்தன. பத்தாததற்க்கு சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து இந்தியன் 2 படத்தை வெகுவாக பாதித்தது. இதனால் சிறிது காலம் படப்பிடிப்பை தள்ளி வைத்தனர்.

இதற்கிடையில் கொரோனாவின் சூழ்நிலையால் படப்பிடிப்பு மொத்தமும் கைவிடப்பட்டது. இடையில் படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லுமாறு லைகா கமல்ஹாசன் மற்றும் சங்கர் ஆகியோர் உடன் கருத்து வேறுபாட்டில் இறங்கியதும் பின்னர் கமல் இந்தியன் 2 படத்தை கொஞ்சம் காலம் ஒதுக்கி வைக்கலாம் என முடிவு செய்ததும் படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.

இடையில் சங்கர் கூட வேறு ஏதாவது படம் இயக்கலாம் என முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது இறுதியாக சங்கர் கமலஹாசன் இல்லாத காட்சிகளை விரைவில் படமாக்க உள்ளாராம். அதில் காஜல் அகர்வால் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாம்.

kamal-indian2
kamal-indian2

அதனைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் கழித்து குறிப்பாக தேர்தல் முடிந்து தன்னுடைய காட்சிகளை ஒரே ஷெட்யூலில் முடித்துக் கொடுப்பதாக கமல்ஹாசன் படக்குழுவினருக்கு உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து எடுத்த படம் அரை முழுவதும் ரெடி செய்து வைத்துவிடலாம் என சங்கர் களமிறங்கி விட்டாராம். பெரும்பாலும் 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்தியன் 2 படம் வந்துவிடும் என தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்