ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஷங்கர்.. விரைவில் கமலுக்கு கொடுக்க போகும் ஷாக்

Indian 2 : உலக நாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம். பல வருடங்களாக ஏதோ ஒரு காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை இந்தியன் 2 படம் எப்படி இருக்கிறது.

இந்த படம் எப்போது வெளியாகும் என சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அல்லது ஏப்ரலில் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

Also Read : நிம்மதியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் தவிக்கும் ஷங்கர்.. 2 மகள்களால் கண்ணீர் வடிக்கும் சோகம்

அதாவது ஒரே ஆண்டில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் வெளியாக இருக்கிறதாம். அதாவது இயக்குனர் ஷங்கர் இத்தனை வருடங்களாக எடுத்த படப்பிடிப்பு காட்சிகளை சேர்த்து பார்த்திருக்கிறார். அதில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக வருகிறதாம். இதில் எப்படி மூன்று மணி நேரம் காட்சிகளை கட் செய்ய முடியும்.

ஆகையால் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று ஷங்கர் முடிவெடுத்திருக்கிறாராம். மேலும் இரண்டு பாகங்களாக உருவாவதால் கமல் இன்னும் சில காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கிறதாம். இப்போது பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் பிஸியாக இருக்கிறார்.

Also Read : தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்குகிறாரா? வாய்ப்பில்லை ராஜா

அவர் அந்த படப்பிடிப்பை முடித்து வந்த பிறகு இது குறித்து அவரிடம் பேசப்பட இருக்கிறார்கள். ஆகையால் இன்னும் 20 நாட்கள் மட்டும் கமல் நடித்தால் மூன்றாம் பாகமும் ரெடியாகிவிடும். அதன் பிறகு எடிட்டிங் வேலைகள் செய்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை வெளியிட இருக்கின்றனர்.

இயக்குனர் ஷங்கர் படங்களில் பட்ஜெட் எப்போதுமே அதிகமாக தான் இருக்கும். அதேபோல் தான் 2 படத்தையும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிடுவதால் கண்டிப்பாக எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூல் அள்ளும் என கூறப்படுகிறது.

Also Read : மாஸ் ஹீரோவை அமெரிக்காவில் மடக்கிய கமல்.. அடுத்த தயாரிப்புக்கு ரெடியாகும் ராஜ்கமல் நிறுவனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்