வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரஜினியை கௌரவித்த வருமானவரித்துறை.. மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்

முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் ரஜினிகாந்த்துக்கு வருமான வரித்துறை விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும் விருது பெற்ற சூப்பர் ஸ்டாருக்கு பாராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் திரையுலகில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது அவர் நடிக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு கூட இவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இவர் தான் அதிகபட்ச வருமான வரி செலுத்தி இருப்பதாக வருமான வரித்துறை இவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. வருடம் தோறும் வருமான வரி தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருட வருமான வரி தின நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த விருதை அவர் வந்து நேரில் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா பெற்றுக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் பல வருடங்களுக்கு முன்பு ரஜினி நான் தான் அதிகமாக வருமான வரி செலுத்துகிறேன் என்று கூறியிருந்தார். அந்த வீடியோவும் தற்போது ரஜினி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் நேர்மையாக வருமான வரியை கட்டி இருக்கும் ரஜினியை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

Trending News