மகுடிக்கு மயங்கிய பாம்பான வாரிசு நடிகை.. திட்டம் போட்டு கவுத்தியதால் கதி கலங்கிய அப்பா

பெரிய படிப்பெல்லாம் படித்திருந்தாலும் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதத்துடன் திரையுலகில் கால் பதித்த அந்த நடிகையை சுற்றி ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தது. பெரிய இடத்துப் பெண் என்பதால் தான் அவருக்கு வாய்ப்புகள் குவிகிறது என்ற பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை தொடர்ந்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே ஓவராக வாய் பேசும் நடிகையைப் பற்றி பல விமர்சனங்கள் இருக்கிறது. அதில் சமீப காலமாக நடிகையின் நடவடிக்கைகள் மாறியதும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. கலகல பெண்ணாக இருக்கும் நடிகை கொஞ்ச நாட்கள் ஆகவே ஒரு இசை பிரபலத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

Also read : குடும்ப குத்து விளக்குனு நினைச்ச அந்தரங்கத்திற்கு அடி போட்ட நடிகை.. 2ம் தாரமாக வாக்கப்பட வலையில் விழுந்த நடிகர்

தற்போது முன்னணி நடிகர்களுக்கு செல்லப் பிள்ளையாக இருக்கும் அந்த இசையமைப்பாளர் சந்திக்காத பிரச்சனைகளே கிடையாது. பார்ப்பதற்கு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் இருக்கும் அந்த பிரபலம் வயதில் மூத்த நடிகைகளை கூட விட்டு வைக்க மாட்டார். பல நடிகைகளுடன் காதல் லீலை புரிந்த அவர் இப்போது வாரிசு நடிகையையும் மயக்கி விட்டாராம்.

நடிப்பு மட்டுமல்லாமல் நன்றாக பாடவும் செய்யும் அந்த நடிகைக்கு இந்த இசையமைப்பாளரின் இசையில் பாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அதற்காக அவரிடம் எதார்த்தமாக பழக ஆரம்பித்த நடிகை தற்போது ஓவர் நெருக்கம் காட்டுகிறாராம். ஏற்கனவே மகள் நடிக்க வந்தது அவருடைய அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

Also read : கண்டுக்காமல் போன வாரிசுகள்.. படமும் பிளாப், விரக்தியில் நிம்மதியை தேடிச் சென்ற டாப் நடிகர்

இருந்தாலும் மகளின் பிடிவாதத்திற்காக சம்மதித்தார். மேலும் மகள் எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் நடிக்கும் பட ஹீரோக்களை கூட மாப்பிள்ளை தேடுவது போல் செலக்ட் செய்தார். இப்படி அவர் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்க மகள் சத்தம் இல்லாமல் இப்படி ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த பலரும் வாரிசு நடிகைக்கு இசையமைப்பாளரை பற்றி சொல்லி எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் நடிகை நீங்கள் நினைப்பது போல் இல்லை நாங்கள் நண்பர்கள்தான் என்று கூறி வருகிறாராம். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read : மீசை நரைத்தாலும் ஆசை விடவில்லை.. பணத்தைக் காட்டி படுக்கைக்கு அழைத்த 64 வயது இயக்குனர்

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -