வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிக் பாஸ் வீட்டில் தந்திரமாக இருக்கும் போட்டியாளர்.. சிவப்பு காய் பின்னாடி கருப்பு காயும் பின்னாடியே போகுது

Bigg boss Tamil 8: ஒரு இடத்தில் இரண்டு பேர் கூட்டம் கூட்டினாலே அங்கே சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். அதிலும் ஒரு வீட்டிற்குள் 18 போட்டியாளர்களை அனுப்பி உங்களுடைய பொழுதுபோக்கை சண்டை போட்டு முட்டி மோதிக் கொண்டு கலவரம் பண்ணுவது தான் என்று ஒரு புள்ளி வைத்து கொடுத்ததால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அந்த புள்ளியை வைத்து ரோடு போட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் பக்கத்து வீட்டில் சண்டை நடந்தாலே நம் எட்டி இருந்து பார்த்து அதை பற்றி புரணி பேசி நேரத்தை செலவிடுவோம். அப்படி இருக்கும்பொழுது தினமும் வீட்டில் இருந்தபடியே பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை பார்க்க வேண்டும் என்றால் நமக்கு அதுதான் பொழுதுபோக்கே. தற்போது 17 போட்டியாளர்களும் தந்திரமாக விளையாடுகிறோம் என்ற நினைப்பில் ஒவ்வொருவரும் காய் நகர்த்தி வருகிறார்கள்.

தன் தலையில் தானே மண்ணே வாரி போடும் போட்டியாளர்

ஆனால் உண்மையிலேயே அங்க தந்திரவாதியான ஒரு போட்டியாளர் தான் ஜெயிக்கப் போகிறார். அந்த கணக்கின்படி தற்போது வரை ஒவ்வொரு விஷயங்களையும் பக்கவாக காய் நகர்த்தி மற்றவர்களையும் தன் பேச்சைக் கேட்கும் அளவிற்கு ஆண்கள் போட்டியாளர்களில் ஒருவர் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார். அவர் வேறு யாருமில்லை பேச்சாளர் முத்துக்குமார் தான்.

இவர் பேச்சைக் கேட்டு தான் மற்ற ஆண் போட்டியாளர்களும் விளையாடுவது போல் தெரிகிறது. அந்த வகையில் நாமினேஷனை எப்படி கணக்கு பண்ணி யாரை வெளியே அனுப்ப வேண்டும் யாரை உள்ளே வைத்திருக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதன்படி ஜாக்லின் மற்றும் சௌந்தர்யா தான் என்னுடைய டார்கெட். இதுதான் காரணமாக சொல்லப் போகிறேன் என்ற ஆண்கள் அணி மத்தியில் சொல்லிவிட்டார்.

அதன்படி நாமினேஷன் பண்ணும் போது முத்துக்குமார் என்ன சொன்னாரோ அதன்படியே பின்னாடி நாங்களும் வருகிறோம் என்பதற்கு ஏற்ப கருப்பு ஆடாக ஆண்கள் அணி நாமினேஷனை பண்ணி விட்டார்கள். இப்படி முத்துக்குமார் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாடி அவர் நேரடியாகவே சொல்கிறார், இங்கே நான் சொந்தம் கொண்டாடவோ நட்பை வலுப்படுத்தவோ வரவில்லை.

இங்கே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் என்னுடைய வெற்றிக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக நான் காய் நகர்த்துகிறேன். நான் ரொம்பவே மோசமானவன் தான், என்னை யாரும் நம்ப வேண்டாம், நான் எல்லா விஷயங்களையும் கணக்கு பண்ணி நான் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதன்படி தான் விளையாடுவேன் என்ற வாக்குவாதத்தை தெளிவாக வைத்து விட்டார்.

இப்படி முத்துக்குமார் அவருடைய விஷயத்தில் தெள்ளத் தெளிவாக இருக்கிறார். ஆனால் முத்துக்குமார் கேரக்டர் கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கவில்லை என்று அன்ஷிதா மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்து விட்டார். ஆனால் முத்துக்குமார் என்ன சொல்ல வருகிறார் என்று கூட காது கொடுத்து கேட்காமல் தன்னுடைய கருத்தை மட்டும் பதிவிட்டு ஒரு கண்டன் கிரியேட் பண்ணி விட்டார்.

ஏற்கனவே அன்ஷிதாக்கு வெளியே நெகட்டிவ் விமர்சனங்கள் தான் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது தன் தலையில் தானே மண்ணை வாரி போடும் விதமாக முத்துக்குமாரை பகைத்துக் கொண்டதால் அன்ஷிதா எப்போது நாமினேஷனில் சிக்குவார் எலிமினேட் பண்ணி வெளியே அனுப்பலாம் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தற்போது வந்த ஓட்டுக்கணிப்பின்படி சச்சனா தான் கம்மியான ஓட்டுகளை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

Trending News