90-களில் கேஎஸ் ரவிக்குமார், சரத்குமாருக்கும் ஏற்பட்ட கடும் சண்டை.. டூப்  போட்டே படத்தை முடித்த கொடுமை

தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய ஹிட் படங்களை கொடுத்த கேஎஸ் ரவிக்குமார், நடிகர் சரத்குமாரை வைத்து 10 படங்களை இயக்கியுள்ளார். அதிலும் 1990ல் வெளியான புரியாத புதிர் திரைப்படம் கேஎஸ் ரவிக்குமாருக்கு மட்டுமல்ல சரத்குமாருக்கும் முதல் படம். இந்தப் படத்தின் ஷூட்டிங்-கின் போது கேஎஸ் ரவிக்குமாருக்கும் சரத்குமாருக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் படத்தில் இடம்பெறும் காட்சிகளை டூப் போட்டே படத்தை முடித்த கொடுமையும் அரங்கேறி உள்ளது. புரியாத புதிர் படப்பிடிப்பு தளத்திற்கு மாலை 6 மணிக்கு வர வேண்டிய சரத்குமார், நள்ளிரவு 2 மணிக்கு வந்து சேர்ந்தார். அதுவரை கேஎஸ் ரவிக்குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் அவருக்காக காத்திருந்தனர். இருப்பினும் சண்டைக் காட்சிகளை படமாக்கி விடலாம் என சரத்குமாருக்கு பதில் டூப் போட்டே படத்தில் இடம்பெறும் ஆக்சன் காட்சிகளை படமாக்கினார்கள்.

Also Read: சரத்குமார், மீனா இணைந்து கலக்கிய 5 படங்கள்.. நாட்டாமை தம்பி பசுபதியை மறக்க முடியுமா?

ஆனால் அப்போது கூட சரத்குமார், இப்போது வருவார் அப்போது வருவார் என வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டே தான் ஒவ்வொரு காட்சிகளையும் கேஎஸ் ரவிக்குமார் எடுத்துக்கொண்டு இருந்தார். கடைசிவரை வராத சரத்குமார் வெகு நேரம் கழித்து வந்த பிறகு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் சரத்குமாரின் முகத்தையே டூப் செய்து படத்தை முடித்து விடலாம் என்று கோபத்தில் உச்சத்துக்கு கேஎஸ் ரவிக்குமார் சென்று விட்டார். ‘படத்தில் நடிக்க இஷ்டம் இருந்தால் வர சொல்லுங்கள். இல்லை என்றால் கிளம்ப சொல்லுங்கள்’ என்று  சரத்குமாரின் மூஞ்சிக்கு நேராகவே கேஎஸ் ரவிக்குமார் பேசிவிட்டார்.

Also Read: KS ரவிக்குமார் இரண்டாம் பாகம் எடுக்க அடம்பிடிக்கும் 5 படங்கள்.. பெரிய பெரிய தலைகளுக்கு கொடுத்த மெகா ஹிட்

மறுபுறம் சரத்குமாருக்கு ஏதோ பிரச்சினை நிகழ்ந்திருக்கிறது. அதனால் தான் படப்பிடிப்பிற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதைப் புரிந்து கொண்ட  பிறகு இருவரும் சமாதான நிலைக்கு வந்துள்ளனர். அன்று இரவு கேஎஸ் ரவிக்குமாரை அவருடைய வீட்டில் ட்ராப் செய்துவிட்டு தான் சரத்குமார் தன்னுடைய வீட்டிற்கு சென்றாராம்.

மோதலுக்குப் பின் காதல் என்பது ஆண் பெண்ணுக்கு மட்டுமல்ல நட்பிற்கும் உண்டு. அப்படிதான் சண்டையில் ஆரம்பித்த கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாரின் உறவு கடைசியில் நட்பில் வந்து முடிந்தது.  இதனால் அடுத்தடுத்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் தொடர்ந்து 10 படங்களை நடித்திருக்கிறார்.

Also Readகே.எஸ் ரவிக்குமார் அதிக லாபம் பார்த்த படம்.. ஆனாலும் இரண்டே படத்தால் க்ளோஸான கேரியர்

அதிலும் சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை, பாட்டாளி, சமுத்திரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்கள் இவர்களது கூட்டணியில் வெளியானது. இருப்பினும் முதல் படத்தில் ஏற்பட்ட கடும் சண்டையைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கேஎஸ் ரவிக்குமார் வெளிப்படையாகப் பேசி உள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

- Advertisement -