1954இல் எம்ஜிஆர் சிவாஜி சேர்ந்து நடித்ததால் ஏற்பட்ட உயிர் பலி.. மதுரையில் ஏற்பட்ட கலவரம்

MGR and Sivaji: சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு பல வெற்றி படங்களை கொடுத்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் சின்னப்பா- கிட்டப்பா முதல் தற்போது அஜித்- விஜய் வரை தொடர்ந்து கொண்டே வருகிறது. இவர்களில் நீண்ட காலம் வரை நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களை அதிக அளவில் இழுத்த ஜோடி யார் என்றால் எம்ஜிஆர் சிவாஜி தான்.

அந்த வகையில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் மக்கள் இவர்களை தூக்கிக் கொண்டாடி உச்ச நட்சத்திரங்களாக பார்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்ததால் மிகப்பெரிய விபரீதமே ஏற்பட்டிருக்கிறது. அதாவது 1954 இல் டிஆர் ராமண்ணா இயக்கத்தில் கூண்டுக்கிளி படம் வெளிவந்தது.

இதில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். ஆனால் எம்ஜிஆர் ஹீரோவாகவும், சிவாஜி நெகடிவ் கேரக்டரிலும் நடித்தார். இருந்தாலும் படம் முழுவதும் சிவாஜி வருவார், அங்கங்கே எம்ஜிஆர் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்துக் கொடுத்திருப்பார். அப்படிப்பட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமில்லாமல் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ரசிகர்கள் போட்டி போட்டு அந்த காலத்திலேயே முட்டி கொண்டார்கள்.

அப்போது படம் ரிலீஸ் அன்று தியேட்டர்களில் ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பி இருக்கிறது. அதனாலேயே பாதி தியேட்டர்களில் படம் போடாமல் அப்படியே நின்று போய்விட்டது. அதற்கு காரணம் மதுரையில் ஏற்பட்ட கலவரம் தான். அதாவது சிவாஜி மற்றும் எம்ஜிஆரின் ரசிகர்கள் பெரிய அளவில் முட்டிக்கொண்டதால் ஒரு உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது.

அதாவது எம்ஜிஆர் ரசிகர்கள் எப்போதுமே என் தலைவர் தான் நியாயத்துக்கும்,  உண்மைக்கும் குரல் கொடுப்பவர். அதனால்தான் இப்படத்திலும் நல்லவராக நடித்திருக்கிறார். ஆனால் சிவாஜி அப்படி இல்லை என்று வெறுப்பேற்றும் அளவிற்கு எம்ஜிஆர் ரசிகர்கள் பேசி இருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த சிவாஜி ரசிகர் கோபத்தில் எம்ஜிஆர் ரசிகரை கத்தியால் குத்திருக்கிறார்.

இதனால் அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. இந்த ஒரு விஷயம் பல பிரச்சனைகளை எழுப்பி பூகபகமாக வெடித்தது. அதனாலயே இந்த படம் முதலும் கடைசிமாக இருக்கட்டும் என்று எம்ஜிஆர் சிவாஜி முடிவு செய்து அடுத்து எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்க கூடாது என்று சபதம் எடுத்து விட்டார்கள். அதே மாதிரி தற்போது அஜித் விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் அடித்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் முற்றுப்புள்ளி வைக்க வேறு யாரும் முன் வருவதில்லை. இது என்னமோ சினிமாவுக்கு விதிக்கப்பட்ட சாபமாக இருக்கிறது.