சிவகார்த்திகேயனுக்கு வக்காலத்து வாங்கும் இமானின் EX மனைவி.. மிரட்டி வாங்கிய விவாகரத்து

Sivakarthikeyan-D Imman: சிவகார்த்திகேயன் பற்றி இமான் வெளியிட்ட ஒரு செய்தி பூகம்பமாக வெடித்திருக்கிறது. நம்ம வீட்டு பிள்ளை போல் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அவர் இப்படி ஒரு துரோகத்தை செய்திருப்பாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனாலும் தற்போது அவருக்கு எதிரான கருத்துகள் தான் பரவி வருகிறது.

இந்நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, எங்களுடைய விவாகரத்துக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தவறான தகவல்கள் பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது.

நாங்கள் பிரிய வேண்டும் என்று முடிவு செய்தபோது அவர் தான் சமரசம் செய்ய முன் வந்தார். ஆனால் அவர் மீது இப்போது வீண்பழி விழுந்து விட்டது. இமான் பட வாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு விஷயத்தை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். உண்மையில் விவாகரத்து விஷயத்தில் சிவகார்த்திகேயன் இமான் பக்கம் ஆதரவாக இல்லாமல் போனதை தான் அவர் துரோகம் என்று சொல்லி இருக்கிறார்.

ஏனென்றால் அவர் வேறு ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்துவிட்டு தான் விவாகரத்து பற்றி பேசினார். நான் முடியாது என்று சொன்னதற்கு அரசியல் புள்ளிகளை வைத்து உன் அப்பாவை கொன்று விடுவோம் என்றெல்லாம் மிரட்டி விவாகரத்து வாங்கினார். அதன் பிறகு என் குழந்தைகள் அவரை பார்க்கக்கூட விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது அவர் எப்படி நல்லவராக இருப்பார்.

சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர் என்பதாலேயே நாங்கள் பிரிந்து விடக்கூடாது என சேர்த்து வைக்க முயற்சி செய்தார். அதை தாண்டி வேறு எதுவும் கிடையாது. அப்படிப்பட்டவரை பற்றி இமான் தவறாக பேசியிருக்கிறார். இதனால் அவருடைய குடும்பம் பாதிக்கப்படும் என்பதைக்கூட அவர் யோசிக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவருடனா நான் 12 வருடங்கள் வாழ்ந்தேன் என்று வருத்தப்படுகிறேன்.

மேலும் எந்த ஜீவனாம்சமும் வாங்காமல் வந்த நான் இன்று ஒரு கம்பெனியை ஆரம்பித்து 30 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு மோனிகா முதல் ஆளாக வக்காலத்து வாங்கி இருப்பது ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நெருப்பில்லாமல் புகையுமா எனவும் சத்தம் இல்லாமல் பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்