சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குற்றச்சாட்டை வேறு மாதிரியா காட்டிய இமான்.. அமைதி காக்கும் SK, ஒருத்தர் மட்டும் வாய் திறந்தால் போதும்

Imman SK Issue: சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் மீது இடி போல் ஒரு சர்ச்சை விழுந்துவிட்டது. இதற்கு ஒரே ஒருத்தர் மட்டும் வாய் திறந்தால் மட்டுமே அவர் மீது படிந்த கறை போகும். சிவகார்த்திகேயன் ஆரம்பகால படங்களுக்கு இசையமைத்து அவரை தூக்கி விட்டவர் இசையமைப்பாளர் டி. இமான்.

இவர் சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு பச்ச துரோகம் செய்துவிட்டார். இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பயணிக்க வாய்ப்பில்லை. அப்படி என்னதான் அவர் துரோகம் செய்தார் எனக் கேட்டதும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களது எதிர்காலம் இதனால் கெட்டு விடக்கூடாது, இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார். இமான் சொன்ன இந்த குற்றச்சாட்டை பலவிதமாக திரித்து பேசுகின்றனர்.

‘குழந்தைகளின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது முழுசா எதையும் வெளியில் சொல்ல முடியாது’ என மொட்டையாக இமான் சொன்னதால், அந்த குற்றச்சாட்டை வேறு மாதிரி பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கும் இமானின் முதல் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்திருக்குமோ? அதனால் தான் அவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டாரா? என்றும் யோசிக்கின்றனர். இவர்கள் யோசிப்பதற்கு ஏற்பதான் இமானும் சமீபத்திய பேட்டியில் நிறைய விஷயத்தை ஒழித்து பேசினார்.

இமானின் முதல் மனைவி மோனிகா 13 வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்து, இரண்டு பெண் குழந்தைகளும் அவர்களுக்கு இருந்தது. அப்படி இருக்கும்போது இந்த 13 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் விதமாக இமான் சொல்லிய கருத்து மோனிகாவை மட்டுமல்ல சிவகார்த்திகேயனின் சினிமா கேரியருக்கும் பேராபத்தா இருக்கிறது. இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் எதுவும் பேசாமல் சர்வமும் அடங்கி போய் இருக்கிறார்.

மோனிகா வாயை திறந்தால் தான் மொத்த உண்மையையும் வெளியே வரும். ஆனால் சமீபத்திய பேட்டியில் மோனிகா சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் நல்ல நட்பு மட்டுமே இருக்கிறது. இமான் என்னுடைய அப்பாவை கொன்றுவேன் என மிரட்டி வெறும் 46 நாட்களிலேயே தன்னிடம் இருந்து விவாகரத்து வாங்கி விட்டார். ஒரு வருடத்திற்கு முன்னாடியே பெண்ணை எல்லாம் பார்த்து வைத்துவிட்டு தான் எனக்கு விவாகரத்து கொடுத்தார்.

இப்போது சிவகார்த்திகேயனின் மீது பழி போடுவதற்கு காரணம் அவருக்கு பட வாய்ப்பு வர்றது இல்ல. பட வாய்ப்புகளை பிடிக்க இப்படி எல்லாம் பேசுகிறார் என்று சொன்னார். ஆனால் இமானின் முகத்திரையை கிழிக்கும் வகையில் மோனிகா தனக்கும் சிவகார்த்திகேயனுக்கு தவறான தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக அடித்து சொன்னால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்.

- Advertisement -

Trending News