மாநாடு படப்பிடிப்பிலிருந்து மாஸாக வெளிவந்த சிம்புவின் புகைப்படம்.. ஓரக்கண்ணால் உற்றுப் பார்க்கும் ஹீரோயின்..

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றன.

என்னதான் தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் சிம்புவை விட்டுக்கொடுக்காமல் இன்னமும் அவருக்கு ஆதரவாக துணை நின்று வருகின்றனர்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் வகையில் வெற்றி பெற்றது.

maanaadu
maanaadu

தற்போது அவரது ரசிகர்கள் மாநாடு திரைப்படத்தை முழுவதுமாக நம்பி உள்ளனர். அதற்கு காரணம் அப்படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

maanadu-cinemapettai
maanadu-cinemapettai

மாநாடு படம் விரைவில் வெளிவர உள்ளதால் படக்குழு இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிம்பு மாநாடு பட கெட்டப்பில் பங்கேற்றார்.

தற்போது மாநாடு படக்குழு சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்