உங்க ரேட் எவ்வளவு? மோசமான புகைப்படத்தை பதிவிட்டதால் சிக்கித் தவிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ பட வில்லனின் மகள்

லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த படம் தான் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் வில்லனாக நடித்து மிரள விட்டிருப்பார் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப்.

இவருடைய மகள் ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதைத்தொடர்ந்து சிலர் இவருக்கு தொடர்ந்து கற்பழிப்பு மிரட்டலும் விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ‘உங்க ரேட் எவ்வளவு?’ என்று கேட்டவருக்கு பதிலடி கொடுத்த ஆலியா, ‘என்னுடைய மோசமான உடை புகைப்படத்திற்கு இழிவான மற்றும் அருவருப்பான கருத்துக்களை பெற்று வருகிறேன்.

Aaliyah_Kashyap-2
Aaliyah_Kashyap-2

என்னுடைய புகைப்படத்தை நீக்கிவிட்டு அதன்பின் உங்களுடைய அவதூறான கருத்தை புறக்கணிக்க முடிவு செய்தாலும், இதைப் பற்றி உங்களுடன் பேச வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய நாட்டில் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, பின்பு அவர்களுக்காக மெழுகுவத்தி ஏற்றி ஊர்வலம் செய்வார்கள்.

ஆனால் அந்தப் பெண் உயிரோடு இருக்கும்போது, அவளை பாதுகாக்க தவறி விடுகிறோம். ஆகையால் இது போன்ற கேவலமான செயலை நிறுத்திவிடுங்கள்’ என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -