இந்த பிரபலதிற்காக சம்பளத்தை வேண்டாம் என உதறி இளையராஜா.. யார், என்ன படம் தெரியுமா.?

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத வெற்றி இயக்குனர்களில் இவரும் ஒருவர். சிங்கிள் லைன் ஸ்டோரி என்கிற ஒரு வரி கதையை திரைக்கதையால் பலம் சேர்த்து ஒரு முழு படத்தை எடுப்பதில் வித்தகர். இப்போதய தருணத்தில் சில கோடிகளை ஊதியமாக வாங்கும் பி.வாசு இயக்குனர் ஸ்ரீதரிடம் தான் பணியாற்றினாராம்.

படிப்படியாக முன்னேறிய வாசு சில படங்களுக்கு கதை திரைக்கதை என மிரட்டியிருக்கிறார். இயக்குனர் சந்தான பாரதியடன் இணைந்து முதல் முதலாக பி.வாசு இயக்கிய படம் “பன்னிர் புஷ்பங்கள்” 1986-ல் வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த வெற்றி தான் சந்தான பாரதியுடன் இணைந்து சில படங்களை இயக்க வைத்ததாம். முதல் படமான பன்னிர் புஷ்பங்கள் பற்றி பேசவே உடனே அப்போது இசைஞாணி தான் எந்த படம் என்றாலும் அவரையே எங்கள் படத்திற்கும் இசையமைக்க கேட்கவே சட்டென ஒப்புக்கொண்டாராம் இசைஞாணி.

அதில் சிக்கல் என்னவெனில் அப்போது இசைஞாணி வாங்கிக்கொண்டிருந்த சம்பளம் ஒரு படத்திற்கு ஒரு லட்சம் பி.வாசு டீமுக்கு படத்தின் பட்ஜெட்டே 5 லட்சங்கள் தானாம். பாடல்கள் எல்லாம் முடித்து ரீ ரெக்கார்டிங்கும் முடித்து கொடுத்தாராம் இளையாஜா.

படக்குழுவோ பயத்தின் உச்சத்தில் இருக்க சார் சம்பளம் என்று சொன்னதும் அடுத்தடுத்த வேலைகளை பார்ப்பாராம் இசைஞாணி. படப்பதிவு முடிந்து இறுதிகட்ட நேரத்தில் “சார் உங்கள் சம்பளம் என்ன” என கேட்ட தருணம் இசைஞாணி சொன்னாராம் “ஃப்ரீ” என்று திக்குமுக்காடியதாம் படக்குழு.

உடனே பி.வாசு மற்றும் சந்தான பாரதியை அழைத்தாராம் இசைஞாணி “ஸ்ரீதர் சார் என்னிடம் சொன்னார் நம்ம பசங்க தான் என்னை உயர்த்தினார்கள்” என்று. சொல்லி சிரித்து இசைஞாணி கடந்திட கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனராம் பி.வாசுவும், சந்தான பாரதியும்.

p-vasu-cinemapettai
p-vasu-cinemapettai
- Advertisement -