கரகாட்டக்காரன் படத்தை பார்த்துவிட்டு கங்கை அமரனுக்கு வாய்ப்பு கொடுத்த கமல்.. கெடுத்துவிட்ட இளையராஜா!

இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் வெற்றிக் கொடி நாட்டியவர் தான் கங்கை அமரன். கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படமெல்லாம் ஆயிரம் நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

அன்றைய காலகட்டங்களில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. இவ்வளவு ஏன், ராமராஜனுக்கு நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்கள் லிஸ்டில் கங்கை அமரனுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. கரகாட்டக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தேடிப்போய் கங்கை அமரனுக்கு பட வாய்ப்பு கொடுத்தார்.

அதிவீரபாண்டியன் என்ற படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஏற்கனவே கங்கை அமரன் இயக்கத்தில் ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருந்த படம் தான் சின்னவர். முதலில் கங்கை அமரன் இயக்கிய சின்னவர் படம் நீளமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து படத்தின் நீளத்தை குறைத்து வெளியிட்ட பிறகுதான் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இளையராஜா ஏற்கனவே சின்னவர் படத்தை பார்த்து விட்டு நேராக கமலிடம் சென்று, சின்னவர் படம் பார்த்தேன், படத்தில் ஒன்றுமே இல்லை என கமல்ஹாசனிடம் பத்த வைத்து விட்டாராம்.

இதனால் கமல் அடுத்த நாள் கங்கை அமரனை அழைத்து அதிவீரபாண்டியன் படத்தை கைவிட்டு விடலாம் என கை கழுவினாராம். இளையராஜா வளர்ந்து வந்த காலகட்டத்தில் கங்கை அமரன் அவரை விட வேகமாக வளர்ந்து வந்தது அவருக்கு எங்கேயோ பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகவும், அதன் காரணமாக கங்கை அமரனை எப்படியாவது கீழே தள்ளிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளையராஜா செயல்பட்டதாகவும் அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

kamal-ilayaraja-gangaiamaran
kamal-ilayaraja-gangaiamaran

இந்த உண்மையை கங்கை அமரன் சித்ரா லட்சுமணன் எடுத்த யூடியூப் பேட்டியில் ஓபன் ஆகவே தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அந்த காலத்தில் இளையராஜா செய்ததெல்லாம் கேட்டு சமீபத்திய ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News