இளையராஜா ரகுமான் ஜேசுதாஸ் மூவரும் இணைந்த ஒரே பாடல்.. இந்த பாடலுடன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நடிகை

Ilayaraja, Raghuman, Jesudas is the only song that the trio has collaborated on: பாலு மகேந்திரா இயக்கத்தில் 1980 நவம்பரில் வெளிவந்த  திரைப்படம் மூடுபனி. பிரதாப் போத்தன், ஷோபா, போன்றோர் நடித்திருந்தனர்  இப்படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

1976 இல் அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. 1980 வரை இடைப்பட்ட நான்கே ஆண்டுகளில் அவரது வளர்ச்சி இமயமாக உயர்ந்து நூறாவது படத்தை எட்டியது. ஆம் இளையராஜா இசையமைத்த நூறாவது படம் தான் மூடுபனி.

இயக்குனர் வெற்றிமாறனின் ஆஸ்தான குரு பாலு மகேந்திரா மற்றும் இளையராஜாவின் காம்போ முதன்முறையாக இணைந்தது. “நான் உருவாக்கும் காட்சிகளை அபாரமான இசையாலும் அர்த்தமான மௌனங்களாலும் நிரப்பியவர் என் ராஜா” என்று இளையராஜாவை கொண்டாடினார் இயக்குனர் பாலு மகேந்திரா.

Also readகதையே கேட்காமல் மெட்டு போட்ட இளையராஜா.. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த படம்

உளவியல்  பிரச்சனைகளை உள்ளடக்கிய திரைப்படமான மூடுபனியில் ராஜா முதலில்  இளையநிலா பொழிகிறது என்ற பாடலுக்கான ட்யூனையே பாலு மகேந்திராவுக்கு போட்டு காண்பித்தாராம். ஆனால் பாலு மகேந்திரா விற்கு இந்த டியூன் பிடித்திருந்தாலும் இந்த படத்திற்கு இந்த டியூன் செட் ஆகாது என்று நிராகரித்து விட்டாராம்.

பின்பு மாற்று ஏற்பாடாக அமைந்த டியூனே என் இனிய பொன் நிலாவே பாடல். இந்த பாடல் ஜேசுதாஸின் குரலில் அற்புதமாக அமைந்தது. மேலும் இந்தப் பாடலில் இளையராஜாவுடன் சவுண்ட் மிக்சிங் காக 14 வயது நிறைந்த  திலீப்குமார் என்கின்ற இளைஞன் பணியமத்தப்படுகிறான். இந்த திலீப் குமார் பின்னாளில் ஏ ஆர் ரகுமான் ஆனார்.

“கண்ணோடு தோன்றும்! சிறு கண்ணீரில் ஆடும்! கை சேரும் காலம்! அதை என் நெஞ்சம் தேடும்!  இதுதானே என் ஆசைகள் அன்பே!”என்று தாயின் அரவணைப்பை இழந்து அன்புக்காக ஏங்கும் இளைஞன் தன் காதலியிடம் தன் மொத்த காதலையும், அவள் கண் அசைவை வேண்டி கொட்டி இருப்பான். இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடிகை ஷோபா தற்கொலை செய்திருந்தார். படத்தின் டைட்டில் கார்டிலேயே என் அன்பு மனைவி அம்மு( ஷோபா)விற்கு  சமர்ப்பணம் என்று கூறியிருந்தார் பாலு மகேந்திரா “என் இனிய பொன் நிலாவே ! பொன் நிலவில் என் கனவே! நினைவிலே புது சுகம் த ர ர தா த தா… தொடருதே தினம் தினம த ர ர தா த தா…”

Also read: இளையராஜா இப்படி ஒரு மனுசனா.? மொத்த வாழ்க்கையும் புட்டு புட்டு வைத்த ஏ ஆர் ரகுமான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்