“ராக் வித் ராஜா” நிகழ்ச்சியை வேற லெவல் பன்னிய இளையராஜா.. வெளிவந்த பல சுவாரஸ்யமான உண்மைகள்

அனைத்து தலைமுறை ரசிகர்களையும் தன்னுடைய மெல்லிய இசையால் கட்டிப் போட்டவர் இளையராஜா. குழந்தைகளுக்கான தாலாட்டு பாடலாக இருந்தாலும் இளைஞர்களை ஆட வைக்கும் குத்து பாட்டு என்றாலும் அதில் இளையராஜாவை மிஞ்ச ஆளே கிடையாது.

தற்போது இவர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து ராக் வித் ராஜா என்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தினார். மிகவும் கலகலப்பான சென்ற அந்த நிகழ்ச்சி பல சுவாரஸ்யங்களும், வேடிக்கைகளும் நிறைந்து காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரம் ரசிகர்களும், பல திரை பிரபலங்களும் ஆவலுடன் வந்திருந்தனர். அதேபோல் நடிகர் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவருடனும் வந்து கலந்து கொண்டார். இளையராஜா இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துச் செல்வதற்காக பல விஷயங்களையும் சுவாரசியமாக பகிர்ந்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.

அதேபோன்று நமக்குத் தெரியாத பல விஷயங்களையும் அவர் மேடையில் பகிர்ந்து கொண்டார். அதாவது நாயகன் திரைப்படத்தில் நிலா அது வானத்து மேலே என்ற ஒரு பாட்டு இடம் பெற்றிருக்கும். ரசிகர்கள் மத்தியில் இப்போதும் இந்த பாடலுக்கு தனி இடம் உண்டு.

உண்மையில் இந்தப் பாடல் ஒரு தாலாட்டு பாடலாகத்தான் உருவாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மணிரத்னத்துக்காக இந்த பாட்டை ஒரு ஐட்டம் சாங்காக மாற்றிவிட்டதாக இளையராஜா தெரிவித்தார். அதேபோல் முரட்டுக்காளை படத்தில் வரும் ஒரு டியூனை ஏ வி எம் நிறுவனத்துக்கும் போட்டு காசு வாங்கி விட்டதாக அவர் வேடிக்கையாக கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் தயாரிப்பில் வெளிவந்த வள்ளி படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடல் வெற்றி பெற்றதற்கு உன் மாமனார் தான் முக்கிய காரணம் என்று அவர் தனுஷையும் கலாய்த்து பேசினார். இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் ஒன்றல்ல இரண்டல்ல பல சுவாரஸ்யமான தகவல்களை இளையராஜா பகிர்ந்து கொண்டார்.