ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பெருமையா இருக்கு, இளையராஜா வாழ்த்து.. ஆஸ்கர் லெவலுக்கு ஃபீல் பண்ண வெங்கட்பிரபு

உங்களது வார்த்தையே என் வாழ்நாள் சாதனை விருது என இளையராஜாவின் பாராட்டு பதிவை வெளியிட்டு வெங்கட்பிரபு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் படத்தை இயக்கவுள்ளார் .

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் கைகோர்த்து வெங்கட் பிரபு முதன்முறையாக தெலுங்கு திரைப்படம் இயக்கும் நிலையில், இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். இதனிடையே சமீபத்தில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி, நாகசைதன்யா, ராணா டகுபதி, சிவகார்த்திகேயன், லிங்குசாமி, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பூஜையில் இளையராஜாவால் கலந்து கொள்ள முடியாததால், வெங்கட் பிரபுவை பாராட்டி ஒரு வீடியோ பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் உன் தந்தை கங்கை அமரன் மற்றும் என்னுடைய எந்த ஒரு உதவியும் இல்லாமல் நீயாக உன் வாழ்க்கையில் வெற்றி பெற்று வருகிறார்.

மேலும் என்னால் பூஜைக்கு வர முடியவில்லை, இருந்தாலும் என்னுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உன்னுடன் இருக்கும். இன்னும் நீ பல திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற வேண்டும் என வெங்கட் பிரபுவை இளையாராஜா தெலுங்கிலேயே பேசி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்

இதனிடையே வெங்கட்பிரபு, இளையராஜாவின் இந்த வீடியோவை, தனது ட்விட்டர் பதிவில் டேக் செய்து, எனக்கு இந்த ஆஸ்க்காரை தந்ததற்கு நன்றி ராஜாப்பா, உங்களது வார்த்தையே என் வாழ்நாள் சாதனை விருது எனவும் லவ் யூ ராஜப்பா என்ற பதிவோடு வெங்கட்பிரபு இளையராஜாவிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

வெங்கட் பிரபுவின் 11 வது திரைப்படமாகவும்,நாகசைதன்யாவிற்கு 22 வது படமாகவும் உருவாக உள்ள இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக ராணா டகுபதி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News