மருத்துவமனையில் இசையமைத்த இளையராஜா.. 38 வருடங்களுக்கு பின்னும் மறக்க முடியாத பாடல்

என்றும் ராஜா தான் என்று சொல்லும் அளவுக்கு இளையராஜாவின் இசை ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளது. இப்போது பல இசையமைப்பாளர்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் இளையராஜாவுக்கென ஒரு தனி இடம் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. அதனாலேயே இப்போதும் அவர் இளமை துள்ளலுடன் வேலை பார்த்து வருகிறார்.

அந்த வகையில் இவர் இசையில் வெளிவந்த எத்தனையோ பாடல்கள் ரசிகர்களின் மனதை மயக்கி இருக்கிறது. அதிலும் அவரின் காதல் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அப்படி ஒரு முத்திரையை பதித்த இளையராஜா வேலை என்று வந்துவிட்டால் எப்படியாவது முடித்துக் கொடுத்து விடுவார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பார்க்கலாம்.

Also read: சம்பள விஷயத்தில் பெரிய மனுஷனாக நடந்து கொண்ட ரஜினி.. அஜித், விஜய் தயவு செஞ்சு கத்துக்கோங்க

சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவுக்கு உடல்நல பிரச்சனையின் காரணமாக ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதனால் மருத்துவமனையில் இருந்த அவர் அங்கிருந்து கொண்டே ஒரு பாடலை இசை அமைத்திருக்கிறார். அதுவும் விசில் அடித்தே மெட்டு போட்டு காட்டி இருக்கிறார்.

அவருடைய நிலையை புரிந்து கொண்ட பட குழுவினரும் அங்கிருந்தபடியே டியூனை வாங்கி ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள். மேலும் தொலைபேசி மூலமாகவே இளையராஜா பாடலில் சில திருத்தங்களையும் கூறி இருக்கிறார். இதனால் பாடல் பத்து நிமிடங்களிலேயே ரெக்கார்ட் செய்யப்பட்டு விட்டதாம்.

Also read: 80களில் ரஜினி, கமலையும் பயப்பட வைத்த 5 ஹீரோக்கள்.. பெண்களை விடுங்க ஆம்பளையும் சுற்ற வைத்த நடிகர்

அப்படி இளையராஜா மருத்துவமனையில் இருந்தே இசையமைத்த அந்த பாடல் 38 வருடங்கள் கழிந்த நிலையிலும் இப்போதும் மறக்க முடியாத ஒரு பாடலாக இருக்கிறது. அப்படி ஒரு சிறப்பைப் பெற்ற அந்த பாடல் தான் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம் பெற்று இருந்த காதலின் தீபம் ஒன்று என்ற பாடல். அந்தக் காலகட்டத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்ட பாடல் தான் இது.

எஸ் பி பாலசுப்ரமணியம், ஜானகி குரலில் உருவான அந்தப் பாடலுக்கு ரஜினி, மாதவி இருவரும் தங்கள் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருப்பார்கள். இப்போதும் கூட அந்த கால ரசிகர்களின் விருப்ப பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இளையராஜா எங்கிருந்தாலும் தன் திறமையை நிரூபித்து விடுவார் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் இருக்கிறது.

Also read: இளையராஜாவை வெறுத்த ரஜினி.. 28 வருடங்களாக ஒதுக்கி வைத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்