இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் இளையராஜா.. திட்டம் போட்டு காய்களை நகர்த்தும் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி நடிகர் சூரியின் நடிப்பில் விடுதலை படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சிறிய பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 40 கோடி வரை மெகா பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், பார்ட் 1, பார்ட் 2 என இரண்டு பாகங்களாக ரிலீசாக உள்ளது.

இதனிடையே அண்மையில் இப்படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில், கிட்டத்தட்ட 12 கெட்ட வார்த்தைகளையும் நீக்கியுள்ளனர். இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள விடுதலை திரைப்படம் கடந்த நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்திற்காக ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்து வரும் வெற்றிமாறன், இப்படத்தின் வெற்றியையும் பார்க்க ஆவலுடன் உள்ளார்.

Also Read: நீங்க பத்து தலையா இருக்கலாம் ஆனா நான் ஒரே தல தான்.. இளையராஜா, ஏஆர் ரகுமானுக்கு வைக்கும் செக்

நடிகர் சூரி முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமாகி நடிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி விடுதலை பார்ட் 1 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளதையடுத்து ரிலீசுக்கு இரண்டு நாட்களே உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வெற்றிமாறன் கிடுக்கிப்பிடி கொடுத்துள்ளார்.

வெற்றிமாறனும், இளையராஜாவும் முதல் முறையாக இணைந்துள்ள நிலையில், வெற்றிமாறனின் வேண்டுகோளுக்கு இணங்க இளையராஜா பல புதுமையான இசை வேலைப்பாடுகளை செய்து வந்தார். ஆனால் தற்போது விடுதலை படத்திற்காக இளையராஜா போட்ட அனைத்து மெட்டுகளையும் மாற்றி தருமாறு வெற்றிமாறன் இளையராஜாவிடம் கூறியுள்ளாராம்.

Also Read: வெற்றிமாறனுடைய பெரிய மைனஸ்.. தலையில் துண்டை போடவைக்கும் படுபாதக செயல்

பொதுவாக இசைஞாணி இளையராஜா அவர் போடும் இசையை யார் குறை கூறினாலும், அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதன் காரணமாக அவர் பல இயக்குனர்களிடம் கருத்து வேறுப்பாடுடனே உள்ளார். ஆனால் தற்போது வெற்றிமாறன் மெட்டுக்களை மாற்ற சொல்லி கேட்டவுடன், இளையராஜா மறுவார்த்தை பேசாமல் உடனே செய்துக்கொடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய அத்தனை படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த காரணங்களாக அவரது படங்களில் உள்ள கதைகளின் அழுத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் பாடல்கள், மெட்டுக்கள் தனித்துவமாக தெரியும் வகையில் இருக்கும். முந்தைய வெற்றிமாறன் படங்களின் இசை இன்றுவரை பலரது விருப்பமாக இருக்கும் நிலையில், விடுதலை படத்திற்கும் இதுபோன்று அமைய வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக உள்ளார்.

Also Read: ஏ சர்டிபிகேட் வாங்கிய விடுதலை படம்.. சென்சாரில் கட் செய்யப்பட்ட 12 வார்த்தைகள்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை