நீ இன்னைக்கு வசூல்னா நாளைக்கு இன்னொருத்தன்.. தளபதியை வறுத்தெடுக்கும் தயாரிப்பாளர்

Actor Vijay: தற்போது விஜய்க்கும், ரஜினிக்கும் உள்ள பிரச்சனைதான் பூதாகரமாக வெடித்துக் கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வரை கமுக்கமாக இருந்து போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் வெளிப்படையாகவே மோத ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ரஜினி அவருடைய ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் குட்டி கதை ஒன்றை சொல்லி இருந்தார்.

அதில் இவர் சாதாரணமாக பேசினாரோ அல்லது விஜய்யை தாக்கி பேசினாரோ தெரியவில்லை. ஆனால் இவர் பேசியது அனைத்தும் இவருடைய பட்டத்தை கொத்திட்டு போக நினைக்கும் அனைவருக்கும் சவுக்கடி கொடுத்த மாதிரி இருந்தது. அந்த வகையில் பல பிரபலங்களும் இது சம்பந்தமாக அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: ஜெயிலர் படத்தை ஒரு வழி பண்ணிட்டு தான் விடுவாங்க போல.. விஜய், அஜித் பேரை சொல்லி சுத்தலில் விடப்பட்ட நெல்சன்

அதில் தற்போது மூத்த தயாரிப்பாளராக இருக்கும் கே ராஜன் அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். பொதுவாக இவர் யார் என்று கூட பார்க்க மாட்டார் பொது மேடைகளிலும், பத்திரிகையாளர்களிடமும் இவருக்கு தோன்றின விஷயத்தை பட்டென்று பேசி விடுவார். அப்படிப்பட்ட இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதாவது கலாநிதி மாறன் சொன்னது போல் 72 வயதிலும் தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்பது இவருக்கு மட்டும் தான். இந்த இடத்திற்கு வேறு யாரும் வரவும் முடியாது. அதனால் தமிழ்நாட்டில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் என்று கூறியிருக்கிறார். அத்துடன் இப்படி ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் விஜய் ஏன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருப்பது தான் இவ்ளோ பெரிய பிரச்சினைக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

Also read: ரஜினி உருட்டிய உருட்டுக்கு விஜய் எவ்வளவோ பரவாயில்லை.. காக்காவோ, பருந்தோ முதல்ல மனுஷனா இரு!

மேலும் வாரிசு படம் பிரமோஷன் நேரத்தில் சரத்குமார் மேடையில் சூப்பர் ஸ்டார் என்று விஜய்யை சொல்லி இருந்தார். அப்பொழுது அந்த நிமிடமே மேடையில் அனைவரது முன்னாடியும் விஜய் நான் சூப்பர் ஸ்டார் கிடையாது. எப்பொழுதுமே ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார். அதே நேரத்தில் நான் தளபதியாகவே இருந்து கொள்கிறேன் என்று சொல்லியிருந்தால் இன்னும் இவர் மேல் அதிகமான மரியாதை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.

வசூலை வைத்து தான் முடிவு பண்ண வேண்டும் என்றால் இன்னைக்கி இவர் நடித்த ஒன்று இரண்டு படங்களில் வசூல் அதிகரிக்கலாம், நாளைக்கே இவரை விட இன்னொருத்தர் படம் அதிக வசூல் பெறலாம். ஆனால் அதையெல்லாம் வைத்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை தீர்மானிக்க முடியாது என்று நெத்தில அடித்தபடி பதில் அளித்திருக்கிறார். மேலும் இவ்வளவு பிரச்சனைக்கும் நடுவில் விஜய் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பது தான் ஏன் என்று இன்னும் புரியவில்லை.

Also read: நின்னு விளையாடிய 6 கேரக்டர் ரோல்.. ரஜினி கதாபாத்திர பெயரை படமாக உருவாக்க வாசு போட்ட திட்டம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்