வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

முத்து படம் இல்லையென்றால் அஜித் இல்லை.. 27 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த ஏகேவின் வெற்றி ரகசியம்

இன்று இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையுடன் தனது நடிப்பு, ஸ்டைல், மாஸ் என வளம் வருபவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரது படங்கள் இன்று வரை ஆரவாரத்துடன் திருவிழா போல் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், ரஜினிகாந்தின் படங்களை வைத்து எத்தனையோ தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் தங்களது வாழ்வில் அடுத்த படிகளுக்கு முன்னேறி உள்ளனர்.

அதிலும் முக்கியமாக கடன் உள்ள தயாரிப்பாளர்கள், திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் இருந்த இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்டவருக்கு ரஜினிகாந்தின் படங்கள் தான் வாழ்க்கையாக அமைந்தது எனலாம். அந்த வகையில் நடிகர் அஜித்தின் 27 வருட வெற்றிக்கு காரணமானதே ரஜினிகாந்தின் படம் தான் என தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

Also Read: உங்க கடைசி மூச்சு என் வீட்ல தான் போகணும்.. யாரும் யோசிக்காததை செய்து காட்டிய ரஜினி

தமிழ் சினிமாவில் மாபெரும் தூணாய் விளங்கி, இன்று 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருபவர் தான் நடிகர் அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்த அஜித் தற்போது இவரே தமிழ் சினிமாவின் அடையாளமாய் உள்ளார். ஆனால் இவரது ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கை பல சரிவுகளை சந்தித்துள்ளது. இருந்தாலும் அஜித்தின் விடா முயற்சி தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் உள்ளார்.

அந்த வகையில் அஜித் நடித்து ஹிட்டான படம் தான் வான்மதி. இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தயாரித்தார். இவர் இப்படத்திற்கு முன்பாக வரை திரைப்பட திரையரங்கு விநியோகஸ்தராக இருந்தார். இந்த நிலையில் வான்மதி படத்தை தயாரித்திருந்த வேளையில் பணமில்லாததால் இப்படத்தை பாதியிலேயே சிவசக்தி பாண்டியன் நிறுத்தியுள்ளார்.

Also Read: நா போய்ட்டா , நடிகரை தவிர வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கோ! அஜித் தம்பி வெளியிட்ட உருக்கமான பதிவு

அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தை சிவசக்தி பாண்டியன் திரையரங்கிற்கு விநியோகம் செய்துள்ளார். படம் வெளியான நாள் முதல் சக்கைப் போடு போட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் முத்து படத்திற்கு கிடைத்த லாபத்தை வைத்து அஜித்தின் வான்மதி படத்தை எடுத்தாராம். இந்த படம் ஹிட்டான நிலையில், அதற்கு அடுத்தபடியாக இதே கூட்டணியில் காதல் கோட்டை படமும் உருவாகி தேசிய விருதையே அள்ளிச் சென்றது.

இப்படத்திற்கு பின்பு தான் அஜித்தின் திரைவாழ்க்கை சற்று ஏணி போல் எற ஆரம்பித்தது. இப்படி ரஜினியின் முத்து படத்தின் மூலமாக வந்த லாபம் தான் அஜித்தின் முதல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இதனிடையே அன்று மட்டும் ரஜினியின் முத்து படம் இல்லாமல் இருந்ததால், இன்று அஜித் என்ற நடிகர் தமிழ் சினிமாவில் இல்லை என்பது தான் நிதர்சனம்.

Also Read: முதன் முதலில் சூப்பர் ஸ்டார் டைட்டில் போடப்பட்ட படம்.. ரஜினியை எப்போதும் சுற்றி வரும் பாம்பு செண்டிமெண்ட்

- Advertisement -

Trending News