மது, மாது இருந்தாலே சொர்க்கத்தில் இடம் உண்டு.. முடிச்சிடலாமா! வெறித்தனமா வெளிவந்த தலைவர்-171 டைட்டில் டீசர்

Thalaivar 171 title revealed: சூப்பர் ஸ்டார், லோகேஷ் கூட்டணியின் தலைவர் 171 படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் லோகேஷ் D.I.S.C.O என ஹின்ட் கொடுத்து எதிர்பார்ப்பை உயர்த்தி இருந்தார். இப்படி ரசிகர்களின் ஆர்வத்தை தோண்டி இருந்த தலைவர் 171 டைட்டில் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதன் ஆரம்பத்திலேயே தங்க வாட்ச் கடத்தல் பற்றி காண்பிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து ரஜினியின் என்ட்ரியும் மாசாக காட்டப்படுகிறது.

அதன் பின்னணியில் ரெட்ரோ ஸ்டைலில் பாடலும் ஒலிக்கிறது. அதைத்தொடர்ந்து படத்தின் டைட்டில் கூலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்