வாய்ப்பு கிடைத்தால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட காத்திருக்கும் 5 பாகிஸ்தான் வீரர்கள்

இந்தியாவில் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ( ஐபிஎல்) 20 ஓவர் போட்டிகள் ரொம்பவே பிரபலம். இதில் வெளிநாட்டு வீரர்கள் பலரை ஏலத்தின் மூலம் தேவைப்படும் அணிகள் கைப்பற்றும். இதில் உள்ளூர் வீரர்கள் பலர் தங்களது திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். இந்த வகை போட்டிகளில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எப்போதும் பங்கு பெறுவதில்லை. அவர்கள் நாட்டில் அப்படி ஒரு கட்டுப்பாடு. அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டினர் இதில் விளையாடுவதெனில் அதற்கு தகுதியுள்ள 5 வீரர்கள்.

பாபர் அசாம்: இந்திய அணியில் எப்படி விராட் கோலியோ அதேபோல் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம். இவர் மட்டும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்தால் அனைத்து அணியின் உரிமையாளர்களும் ஏலத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.

Babar-Cinemapettai.jpg
Babar-Cinemapettai.jpg

முகமது ரிஸ்வான்: இவர் இப்பொழுது பாகிஸ்தான் அணியின் ஓபனிங் விளையாடிக் கொண்டிருக்கிறார். ரிஸ்வான் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய அதிரடி வீரர். 20 ஓவர் போட்டிகளில் இந்த வருடம் ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களில் இவரும் ஒருவர்.

Riz-Cinemapettai.jpg
Riz-Cinemapettai.jpg

பத்தர் ஜமான்: ஒரு காலத்தில் இந்தியாவின் கங்குலி, டிராவிட், டெண்டுல்கர் எப்படியோ அதைப்போல் தற்போது உள்ள பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், பத்தர் ஜமான். இவர்கள் மூவரும் தற்போது பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Fakhar-Cinemapettai.jpg
Fakhar-Cinemapettai.jpg

ஆசிப் அலி: இந்த உலகப் கோப்பை போட்டிகளில் அனைத்து வீரர்களும் ஆச்சரியப்படும் அளவில் பிரம்மாண்ட சிக்சர்களை அடித்து பாகிஸ்தானின் வெற்றிக்கு பெரிதும் உதவிக் கொண்டிருக்கிறார். ஆசிப் அலி ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் இவரை எடுப்பதற்கு போட்டிகள் நிலவும்.

Asif-Cinemapettai.jpg
Asif-Cinemapettai.jpg

சாஹீன் ஆப்ரிடி: அனைத்து பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தும் வகையில் பந்துவீசி கொண்டிருக்கும் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இவர் விளையாடுவார் என்றால் இவரையும் எடுப்பதற்கு பல போட்டிகள் நிலவும்.

saheen-Cinemapettai.jpg
saheen-Cinemapettai.jpg

Next Story

- Advertisement -