சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இவனுங்க என்ன கூலிப்படை தலைவர்களா? லியோ நெகட்டிவ் விமர்சனங்களுக்கு வரும் மிரட்டல், கண்டுக்காத விஜய் 

Leo Controversy: பெரும் எதிர்பார்ப்புகளின் மத்தியில் கடந்த 19ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய்யின் லியோ படம் வெளியானது. ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகும் போதே  எப்படியாவது ஜெயிலர் படத்தின் வசூலை முந்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விஜய் இருந்தார்.

ஆனால் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் மந்தமானது. காரணம் படத்தின் கதை ஸ்ட்ராங்காகவே இல்லை, சொதப்பி விட்டனர். இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகளும் சோசியல் மீடியாவில் குவிக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி ஜெயிலர் படத்தின்  வாழ்நாள் வசூலை முறியடிக்க முடியும், வாய்ப்பே இல்லை.

ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது விஜய்க்கு ஆசை வந்துருச்சு. ஆனா ஒரு நாளும் விஜய் செய்த மாதிரி ரஜினி செய்ததில்லை என்று தியேட்டர் உரிமையாளர் சங்க செயலாளர் ஆதங்கப்படுகிறார். தர்பார் படம் வெளியான அடுத்த மூன்றாவது நாளே அந்தப் படத்தால் நஷ்டம்னு இழப்பீடு கேட்டு வினியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினார்கள்.

அதுவும் சூப்பர் ஸ்டாரின் வீட்டுக்கு போய் போராட்டம் பண்ணப் போவதாக அறிவிக்கப்பட்டது. பத்து நாள் கூட ஓடாத படத்திற்கு நஷ்ட ஈடு கேட்ட வரலாறு இதுவரை தமிழ் சினிமாவுல இருந்ததில்லை. ஆனால் அப்ப கூட ரஜினியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவோ, எந்த ஒரு விநியோகஸ்தரையோ அல்லது தியேட்டர் உரிமையாளர்களையோ மிரட்டியதாக செய்தி வரலை.

ஆனா லியோ படத்தை பற்றி நெகட்டிவ்  விமர்சனம் செய்தவர்களை எல்லாம் மிரட்டுகின்றனர். இவங்க என்ன தயாரிப்பாளரா அல்லது கூலிப்படை தலைவரா என லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்தை பார்த்து கேட்கிறார். விஜய்யும் இந்த அக்கிரமங்களை எல்லாம் கண்டுக்கலை.

இதே நிலைமை நீடித்தால் தமிழ் சினிமாவிற்கு கட்டாயம் அழிவு ஏற்படுவது உறுதி என்று தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க திருச்சி ஸ்ரீதர் சமீபத்திய பேட்டியில் கொந்தளித்துள்ளார். கோலிவுட்டின் தற்போதைய நிலை என்ன என்பதை ஸ்ரீதர் இந்த பேட்டியின் மூலம் தோலுரித்துக் காட்டினார்.

- Advertisement -

Trending News