மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சில கதாநாயகர்கள் மத்தியில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், வயதான மனிதன், திருநங்கை என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் செல்வனாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.

அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், உள்ளிட்ட நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்தது. இதில் விஜய் சேதுபதி சந்தனம் கேரக்டரில் கொடூரமான வில்லனாக நடித்திருப்பார்.

Also Read: பிளாக்பஸ்டர் ஹிட் பட டீமே இப்படி ஆடல.. வெட்கமே இல்லாமல் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியை பார்க்கவே பயமாக இருக்கும். அப்படிப்பட்ட கொடூரமான சந்தனம் கேரக்டரில் மீண்டும் நடிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருக்கின்றனர். இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, ‘மீண்டும் சந்தனம் கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை. விக்ரம் படத்தில் அந்த கேரக்டர் முடிந்து விட்டது. அதை மீண்டும் வருவதை ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள்.

ஆகையால் சந்தனம் கேரக்டரில் மீண்டும் நடிப்பதில் தானும் விரும்பவில்லை. அந்த கேரக்டர் அவ்வளவு தான்’ என்று கூறியுள்ளார். மேலும் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 மற்றும் விக்ரம் 3 உள்ளிட்ட படங்களில் லோகேஷ் யூனிவர்சில் விஜய் சேதுபதியும் இருப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு தற்போது விஜய் சேதுபதியே பதில் அளித்துள்ளார்.

Also Read: அக்கட தேசத்து விஜய் சேதுபதி இவர்தான்.. கமலே கூப்பிட்டு பாராட்டிய ஹீரோ

தளபதி 67 படத்தில் தான் நடிப்பது குறித்து இதுவரை லோகேஷ் தன்னிடம் எதுவும் பேசவில்லை. விக்ரம் திரைப்படத்தில் சந்தனம் கேரக்டர் தொடர வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான டிஎஸ்பி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதில் போலீஸ் அதிகாரியாக கலக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தின் சக்சஸ் பாட்டியை பொன்ராம் உடன் இணைந்து விஜய் சேதுபதி கேக் வெட்டி கொண்டாடினார். இப்போது பாலிவுட் வரை சென்றுள்ள விஜய் சேதுபதி அங்கு 4,5 படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

Also Read: கமலுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி.. மாஸ் அப்டேட் கொடுத்த டாப் இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்