தல கீழா நின்னாலும் வாரிசுக்கு பயந்து அத செய்ய மாட்டேன்.. அஜித் வெளியிட்ட அறிக்கையால் பதறிய திரையுலகம்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

இந்த சூழலில் அஜித்தின் மேலாளர் போட்ட பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது. அதாவது ஆரம்பத்தில் எல்லா பட ப்ரோமோஷனிலும் தவறாமல் அஜித் கலந்து கொண்டு வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு எந்த விழாவிலும் அஜித் கலந்து கொள்ளவதில்லை.

Also Read : துணிவு படத்தால் பெரும் பின்னடைவை சந்தித்த வாரிசு.. வசூல் வேட்டையில் விஜய்க்கு வந்த ஆபத்து

அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அஜித் மற்றும் அவரது குடும்பம் இடம்பெறவில்லை. தனது பட பிரமோஷனுக்கு கூட அஜித் வரமாட்டார். ஆனால் துணிவு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளதாகவும், அதில் அஜித் கலந்து கொள்ள உள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வந்தது.

ஏனென்றால் சமீப காலமாக அஜித்தின் புகைப்படங்கள் அதிகமாக இணையத்தில் பரவி வருகிறது. மேலும் தனது ரசிகர்களுடன் அஜித் எடுக்கும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. இதனால் ஒருவேளை துணிவு பிரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்வார் என பலரும் நம்பி வந்தனர்.

Also Read : தளபதிக்கு பயத்தை காட்டிய துணிவு படத்தின் வியாபாரம்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் அஜித்

ஆனால் தற்போது அது வதந்தியே என தெளிவுபடுத்தியுள்ளார் உள்ளார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா. ஒரு நல்ல திரைப்படமே அந்த படத்திற்கு சிறந்த பிரமோஷன் என்று அஜித் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் பிரமோஷன் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ள மாட்டேன் என்பதில் அஜித் உறுதியாக உள்ளார்.

ajith-thunivu

இப்போது இந்த அறிக்கை அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆனால் அவர்கள் அஜித்தை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் துணிவு படத்தை வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைய செய்திட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர்.

Also Read : வந்தா மலை போனா மசுரு.. வாரிசை ஒரு கை பார்க்க, துணிவுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த உதயநிதி

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -