தவறான உறவில் இருந்தேன்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அங்காடி தெரு அஞ்சலி

தமிழில் நன்றாக நடிக்க தெரிந்த எதார்த்தமான நடிகைகளில் அஞ்சலிக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் கவனிக்க வைத்தார். அதைத்தொடர்ந்து வெளியான அங்காடி தெரு திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அந்த வகையில் இப்போது தெலுங்கு பக்கம் அதிக ஆர்வம் காட்டி வரும் அஞ்சலி ராம்சரண் நடிக்கும் RC 15 திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் வெப் தொடர்களில் நடிக்கவும் அவர் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த fall வெப் தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

Also read: வெப் சீரிஸில் அதிக ஆர்வம் காட்டும் பிரபலங்கள்.. பல மடங்கு லாபம் பார்க்கும் அஞ்சலி

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தன்னை பற்றிய பல விஷயங்களையும் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதாவது நடிகர் ஜெய்யுடன் இவருக்கு காதல் இருந்தது என்றும் பிரேக் அப் ஆனது என்றும் பல செய்திகள் வெளிப்படையாக வந்தது. அது குறித்து பேசிய அஞ்சலி என்னைப்பற்றி வரும் செய்திகளை மீடியாக்கள் தான் முடிவு செய்கிறது. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களில் யாருடன் என்னை இணைத்து கிசுகிசு எழுத வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனக்கு இருந்த ஒரு ரிலேஷன்ஷிப் பற்றியும் மனம் திறந்து பேசிள்ளார். அதாவது எனக்கு ஒருவருடன் டாக்ஸிக் அதாவது முறையற்ற உறவு இருந்ததாக கூறிய அவர் அந்த பிரபலம் யார் என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்.

Also read: வாய்ப்பு இல்லாததால் ‘ஏ’ சர்டிபிகேட் படத்தில் அஞ்சலி.. படுக்கையறை, குளியல் காட்சிகளில் தாராள கவர்ச்சி

அது மட்டுமல்லாமல் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து கொண்டு தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனால் அதுதான் தவறான உறவு. அப்படி இருக்கும்போது தங்களுடைய சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் உறவை விட கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் தன் கேரியருக்காகவே தன்னுடைய ரிலேஷன்ஷிப்பை பிரேக் அப் செய்து இருக்கிறார் என்றும் அந்த நபர் நிச்சயம் ஜெய்தான் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் அவர் தன்னுடைய குடிபோதையின் காரணமாக பல சர்ச்சைகளை சந்தித்தார். இதுவே அஞ்சலியுடனான பிரிவுக்கும் காரணம் என்று பல செய்திகள் வெளிவந்தது. தற்போது அஞ்சலி மறைமுகமாக கூறியிருக்கும் இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read: கிண்டல் கேலிக்கு ஆளான அஞ்சலி.. வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதும்

- Advertisement -