தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் இளையராஜாவின் மோதல்.. கடும் சவாலை எதிர்பார்த்து இருவர்

தமிழ் சினிமாவை தன் பாடல்களால் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. இவர் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது பாடல்களை கேட்காத ரசிகர்களே இல்லை என்று கூட சொல்லலாம். அவ்வாறு இவரது இசை எங்கும் நிறைந்திருக்கும்.

இசைக்கு மொழி இல்லை என்பதைப்போல இவரது இசை பல மொழிகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது உள்ள இளைய சமுதாயத்திற்கு இளையராஜா இசையில் அவ்வளவு பிரியம். இதனால் இளையராஜா இசையமைப்பதை பார்ப்பதற்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதற்காகவே இளையராஜா அவ்வப்போது மேடையில் நிகழ்ச்சியில் தனது இசையை வெளிப்படுத்தி தனது ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்துவார். இதனால் இளையராஜா பல நாடுகளுக்கு சென்று கச்சேரி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார். அந்த வரிசையில் தற்போது இளையராஜா சென்னையில் “ராக் வித் ராஜா” எனும் நிகழ்ச்சியின் மூலம் நேரடியாக ரசிகர்களை பார்க்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் தேவிஸ்ரீ பிரசாத்தும் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் தங்களுக்குள் போட்டி போட்டு இசை அமைக்க உள்ளனர். இந்த போட்டியை காண அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.  தேவிஸ்ரீ பிரசாத், சமீபத்தில் புஷ்பா படத்திற்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பல படங்களில் இசையமைக்க தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தேவிஸ்ரீ  பிரசாத் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட நாட்களாக இளையராஜா அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என நினைத்துள்ளேன். அந்தக் கனவு தற்போது நிறைவேற இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு இளையராஜா உன்னை மேடையில் சந்திக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

இந்த பதிலை பார்த்ததும் தேவிஸ்ரீபிரசாத் ஆச்சரியத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், எஸ்பிபி சரண் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்.