ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் சினிமா கேரியரை தொலைத்தேன்.. நடிகையின் பரிதாப நிலைமை

ரஜினி நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து ரசிகர்களை அதிக அளவில் தன்வசம் வைத்திருக்கிறார். அது இவருடைய நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானம் என்று இவர் பேசிய மேடைகளில் எல்லாம் சொல்லி இருக்கிறார். அத்துடன் இவருடைய ரசிகர்களும் இவரை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் எப்பொழுது வருவார் என்று இவருடைய வருகைக்காக ரசிகர்கள் ஒரு காலத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் பாபா. இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. இப்படத்தில் நாத்திகராக இருக்கும் ரஜினிக்கு, பாபாஜி தோன்றி ஏழு மந்திரங்களை கொடுத்ததால் அதனை சோதிக்கும் விதமாக இக்கதை அமைந்திருக்கும்.

Also read: ரஜினிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்த மணிரத்தினம்.. கமலுக்கு கிடைத்த கௌரவம்

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார். இவர் பம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான் என அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நடிகை என வலம் வந்தவர். அத்துடன் காதல் சம்பந்தப்பட்ட படத்துக்கு பொருத்தமான நடிகை இவர்தான் என்று பெயரையும் பெற்றிருக்கிறார்.

இப்படிப்பட்ட இவர் பாபா படத்தில் இவருடைய கேரக்டர் ரஜினியை மனதார காதலித்து விட்டு கடைசியில் பணத்துக்காக ரஜினியை நிராகரித்து விட்டு வேற ஒருத்தரை திருமணம் செய்வது போல் அமைந்திருக்கும். இதனால் இவருடைய கேரக்டர் இவர் எதிர்பார்த்தபடி பெரிசாக பேசப்படவில்லை. இதுவே இவருக்கு பெரிய தோல்வியை கொடுத்தது.

Also read: தேரை இழுத்து தெருவுல விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற சோகம்

இந்நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில், பாபா படத்துக்கு முன்னால் நான் பல நல்ல படங்களை கொடுத்து வெற்றியடைய செய்திருக்கிறேன் அது உங்களுக்கே தெரியும். ஆனால் இந்த படத்திற்குப் பிறகு எனக்கு பட வாய்ப்பு வரவில்லை. இந்த படத்தினால் நான் அழிந்தேன். அது வெறும் தோல்வி அல்ல, மிகப்பெரிய டிசாஸ்டர். பாபாவால் மொத்த தென்னிந்திய மொழிகளிலும் எனக்கு மார்க்கெட் சரிந்தது.

என்று மிக வருத்தத்துடன் பேசி இருக்கிறார். இவர் தமிழில் கடைசியாக தனுஷுக்கு மாமியாராக நடித்திருப்பார். இந்த படம் இவருக்கு ஒரு ரீ என்ட்ரி படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பு வராமல் போய்விட்டது. இதனால் இவர் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

Also read: ஆந்திராவில் 50 தியேட்டரில் 100 நாள் ஓடிய தமிழ் படம்.. இதுவரை எந்த ஒரு ஹீரோவும் செய்யாத சாதனை.!

- Advertisement -

Trending News