Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு கொடுக்க முடியாது நான் தான் நடிப்பேன்.. பிடிவாதமாக இருந்த அஜித், வருத்தப்பட்ட இயக்குனர்.!

அஜித் பிடிவாதமாக இல்லாமல் அந்த கேரக்டரை விட்டுக் கொடுத்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய காதல் படமாக கண்டிப்பாக அமைந்திருக்கும்.

தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு இவர்களை கொண்டாடி வருகிறார்கள். அத்துடன் இவர்கள் படம் வெளிவந்தால் என் ஹீரோ தான் பெருசு என்று வாக்குவாதம் வருகிற அளவுக்கு தூக்கி வைத்து ஆடுகிறார்கள். இது சில சமயம் பல பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டிருக்கிறது. இதை சமாளிக்கும் விதமாக விஜய் மற்றும் அஜித் நிறைய இடங்களில் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகுகிறோம். அதனால் எங்களுடைய ரசிகர்களான நீங்களும் எந்தவித பகையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் சொல்வது ரசிகர்களுக்காக மட்டுமே தான் தவிர இவர்களுக்குள் போட்டி பொறாமை இருக்கிறது. அதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் தற்போது அப்பட்டமாக ஒரு விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது நீ வருவாய் என படத்தில் பார்த்திபன் நடித்த கேரக்டரில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டு ராஜகுமாரன் அவரை நினைத்து கதை எழுதி இருக்கிறார். அடுத்ததாக கெஸ்ட் ரோலில் அஜித் என்று ஏற்கனவே முடிவு செய்து அஜித்திடமும் சம்மதத்தை வாங்கி விட்டார்.

Also read: விஜய்யுடனே பயணித்த உயிர் நண்பன்.. இப்போது கண்டும் காணாமல் இருக்கும் தளபதி

பிறகு விஜய் காண கதாபாத்திரத்தை அவரிடம் கூறிய போது விஜய்க்கு கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஆனால் அந்த நேரத்தில் விஜய் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தில் முழுவதும் என்னால் நடிக்க முடியாது கால்ஷீட் பிரச்சினை இருக்கிறது. அதனால் இந்த படத்தில் கெஸ்ட் ரோல் கேரக்டரில் நான் வந்து நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட இயக்குனர் விஜய்யிடம் கெஸ்ட் ரோல் கேரக்டருக்கு நான் ஏற்கனவே அஜித்திடம் சொல்லி விட்டேன். மறுபடியும் இதை நான் எப்படி அவரிடம் பொய் சொல்லுவேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சரி இனிமேல் நீங்களே முடிவு பண்ணிக்கோங்க இதுதான் என்னுடைய முடிவு என்று கூறிவிட்டார். அதன் பின் இயக்குனர் வேறு வழி இல்லாமல் அஜித்திடம் போய் நீங்கள் பார்த்திபன் கேரக்டரில் நடிக்கிறீர்களா உங்கள் கேரக்டரில் விஜய் நடிக்க ஆசைப்படுகிறார் என்று தயக்கத்துடன் சொல்லி இருக்கிறார்.

Also read: துளியும் வருத்தம் இல்லாமல் மகிழ் திருமேனியை பாராட்டிய விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஏகே 62 படம் வெற்றி தான் கொடுக்கும்

அதற்கு அஜித் எனக்கு நீங்க முதலிலேயே இந்த கேரக்டர் தான் கொடுத்திருக்கிறீர்கள். அதுவே எனக்கு இருக்கட்டும் இதில் எந்தவித மாற்றமும் இருக்கக்கூடாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். பிறகு வேற வழியே இல்லாமல் விஜய் நடிக்க இருந்த கேரக்டருக்கு பார்த்திபனை நடிக்க வைத்தார் இயக்குனர். அஜித் ஆசைப்பட்ட மாதிரி கெஸ்ட் ரோலிலே நடித்துவிட்டார்.

ஆனாலும் இந்த படத்தில் விஜய் அஜித் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இயக்குனருக்கு பெரிய ஏமாற்றமாக போய்விட்டது. ஒருவேளை அஜித் பிடிவாதமாக இல்லாமல் அந்த கேரக்டரை விட்டுக் கொடுத்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய காதல் படமாக கண்டிப்பாக அமைந்திருக்கும் என்று இயக்குனர் ராஜகுமாரன் தற்போது வரை வருத்தப்பட்டு வருகிறார்.

Also read: அவசர அவசரமாய் விஜய் சந்தித்த 3 தயாரிப்பாளர்கள்.. கடைசி தடவை வார்னிங் கொடுத்த தளபதி

Continue Reading
To Top