12 பேருக்கு திருமணம் செஞ்சு வச்சேன், ஆனா எனக்கு வாழ்க்கை விளங்கல.. புலம்பி தவிக்கும் வாரிசு நடிகை

Heir Actress: பிரபல நடிகரின் மகளான வாரிசு நடிகை மிகப்பெரிய எதிர்பார்ப்புளுடன் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். கள்ளம் கபடமற்ற முகம், புன்சிரிப்பு போன்ற அனைத்துக்கும் சொந்தக்காரி ஆக வந்தார். நடித்த முதல் படமே முன்னணி ஹீரோ உடன் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பழமொழிகளில் ஹீரோயினாக நடித்தார்.

ஆனால் இவருடைய வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தேவையில்லாமல் எதையாவது வம்புக்கு இழுப்பதே இவருடைய வேலையாகி விட்டது. அதனாலயே பட வாய்ப்புகள் இல்லாமல் கல்யாண வாழ்க்கைக்கு சென்றார். ஆனால் அதுவும் இவருக்கு சரியாக அமையாமல் போய்விட்டது. தொடர்ந்து இவருடைய நடவடிக்கைகள் யாருக்கும் பிடிக்காமல் போனதால் இவரை தண்ணி தெளித்து விட்டார்கள்.

Also read: நின்னாலும் குத்தம் நடந்தாலும் குத்தமா.? காக்கா பருந்து கதையால் திட்டம் தீட்டும் விஜய்

எப்படியும் எக்கேடும் கெட்டுத்தொலை. இங்கிருந்து குடும்ப மானத்தை வாங்காதே என்று வெளியே அனுப்பி விட்டார்கள். அதன்பின்னும் இவர் சும்மா இல்லாமல்  பல சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டார். இவர் அப்பா இருக்கும் ஸ்டேட்டஸிற்கும், குடும்பத்தில் உள்ள மரியாதைக்கும் சம்பந்தமே இல்லாத ஆளாக மாறிவிட்டார். அவர் வேறு யாருமில்லை சர்ச்சை என்றாலே இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கிய வனிதா விஜயகுமார் தான்.

இவருடைய திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் இவருடைய விரக்தியான சூழ்நிலையால் பல்வேறு பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டார். யாராயிருந்தாலும் இவரிடம் பேசி, வெளியில் வர முடியாது என்று சொல்லும் அளவிற்கு சண்டைக்காரி என்ற பெயர் வாங்கி இருக்கிறார். ஆனால் தற்போது எவ்வித தண்டையும் போடாமல் தொடர்ந்து பேட்டிகளில் பல உண்மைகளை போட்டு உடைத்து வருகிறார்.

Also read: ரஜினிக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டி ஓட விட்ட சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் இவருடைய குடும்ப விஷயங்களையும், குடும்பத்தில் ஏற்பட்ட நல்லது கெட்டது மற்றும் இவருடைய அக்கா தங்கைகள் பற்றியும் பேசிக் கொண்டே வருகிறார். அப்பொழுது இவருடைய திருமண வாழ்க்கை பற்றி பேசிய பொழுது, நான் எனது சொந்த முயற்சியில் 12 பேருக்கு திருமணத்தை செய்து வைத்திருக்கிறேன். நான் நடத்தி வைத்த அனைவரும் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். அதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் என் வாழ்க்கை மட்டும் அலங்கோலமாக ஆகிவிட்டது என்று புலம்பித் தவிக்கிறார். நான் இத்தனை திருமணம் செய்தும் அது ஒழுங்காக எனக்கு அமையவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே இருக்கிறது. ஆனாலும் அதை எல்லாம் கடந்து நான் மகிழ்ச்சியாக என்னை வைத்துக் கொள்கிறேன். வேண்டுமென்றால் இன்னும் பல பேருக்கு திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக கூறியிருக்கிறார்.

Also read: சூப்பர் ஸ்டார் கொடுத்த சரியான டிப்ஸ்.. கொழுந்து விட்டு எரிகிற நெருப்பை புஸ்ஸுன்னு அணைத்த தலைவர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்