டான்ஸ் மட்டும் இல்ல நான் அதுலயும் கில்லாடி.. அதனாலதான் பாட்டுலாம் அப்படி இருக்கோ.. மாஸ்டர் பிருந்தா

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனக்கென ஒரு இடம் பதித்தவர் பிருந்தா மாஸ்டர். இவர் பெயர் சொன்னாலே தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் பல நடன டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.

இப்போது இவரது குடும்பத்தில் இருந்து நான்கு நடன இயக்குனர்கள் சினிமாவிற்குள் வந்துள்ளனர். கலா மற்றும் பிருந்தா மாஸ்டர் அனைவருக்கும் தெரியும். அதேபோல் உதிரிப்பூக்கள் ஜெயந்தி மற்றும் ரகுராமன் இவர்கள் இருவரும் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளனர்.

பிரிந்தா மாஸ்டருக்கு சினிமாவில் பல நண்பர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக குஷ்பு இவரது நெருங்கிய தோழி என்று கூறலாம். ஒருமுறை குஷ்பு மூலமாகத்தான் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் பிறகு கமலுடன் நம்மவர் படத்தில் சேர்ந்து நிர்மலா எனும் கதாபாத்திரத்தில் பிருந்தா மாஸ்டர் நடித்திருப்பார். 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தில் ஒரு பாடலுக்கு கோரியோகிராபர் ஆக பணியாற்றி இருப்பார்.

brindha-master
brindha-master

அதிலும் குறிப்பாக பிருந்தா மாஸ்டர் எந்த எந்த பாடலுக்கு எந்த மாதிரியான காஸ்ட்யூம் டிசைன் பண்ணி அசத்துவதில் கில்லாடி என்றே கூறலாம். அப்படியே காஸ்ட்யூம் பாடலுக்கும் நடனத்திற்கும் மேட்ச் ஆகும் அளவுக்கு பின்னி எடுப்பாராம். சில பல கேமராமேன்களும் அசந்தே போய் விட்டனராம். அதன்பிறகு ஹே சினாமிகா எனும் படத்தை பிருந்தா இயக்கியும் உள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைத்தாலும் புதுவரவுக்கு வழிவிட இந்தி படங்கள் பக்கம் சென்றார் அங்கும் பட்டையை கிளப்பினார். ஆறு வருடங்கள் ஹிந்தியில் குடியேறி அங்கு பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -