ஹீரோயினாக ஆசைப்பட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை.. இதுக்கெல்லாம் தேவையா என மேடையிலேயே அசிங்கப்படுத்திய ராதாரவி

தனியார் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துகொண்ட அந்த நடிகை, தம்பதியினராக அப்போட்டியில் வெற்றிபெற்று திரையில் பல பாடல்களை இருவரும் இணைந்து பாடி வருகின்றனர். இதனிடையே இந்த வருடத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் மதுரவீரன் என்ற பாடலை பாடிய நிலையில் அவரை நீக்கி அத்திரைப்படத்தில் நடிகையாக நடித்த அதிதி ஷங்கர் அப்பாடலைப் பாடினார்.

அப்போது அவரது பேட்டி சர்ச்சையாக அமைந்த நிலையில் தொடர்ந்து ராஜலட்சுமிக்கு பாடல் வாய்ப்புகள் எதுவும் சரிவர கிடைக்காமல் போனது. இதனை புரிந்து கொண்ட ராஜலட்சுமி படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்து தனது முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இயக்குனர் கணபதி பிரபு இயக்கத்தில் லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெண்களை மையமாக வைத்து கதை நகரும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : நீ ஒரு பரதேசி, ராதாரவியை வெட்டியான் என பதிலடி கொடுத்த நடிகர்.. பொது இடத்தில் இப்படியா சண்டை போட்டுப்பீங்க!

இத்திரைப்படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடிகர் ராதா ரவி நடித்த நிலையில் இப்படத்தின் தொடக்க நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது ராஜலட்சுமியின் கணவரும் பாடகருமான செந்தில் அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது மனைவியை இப்படத்தில் நடிக்க வைத்ததற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகர் ராதாரவி, ராஜலட்சுமி இத்திரைப்படத்தில் நடிக்கப்போகிறார் என்று இயக்குனர் சொன்னவுடன் சற்று வியந்து போனதாக கூறினார்.

இத்திரைப்படத்தின் கதை அவரது திரை வாழ்க்கைக்கு முக்கியமான கதையாக அமையும் என்றும் ராஜலட்சுமி படத்தில் அருமையாக நடித்துள்ளார் என்றும் ராதாரவி புகழ்ந்து தள்ளினார். அப்படியே பேசிக்கொண்டிருக்கும் தருவாயில், ராதாரவி வழக்கம் போல தனது வறுத்தெடுக்கும் வேலையை ஆரம்பித்தார். இப்போதெல்லாம் போஸ்டரில் ரஜினி படத்தை போட்டாலே படம் இழுத்துக்கிட்டு போகுது, இதுல போஸ்டரில் ராஜலட்சுமி படத்தை போட்டு இருக்காங்க எப்படி போக போகுதோ இயக்குனருக்கு மிகப்பெரிய தைரியம் என்று நக்கலாக கூறினார்.

Also Read : மேடையில் ஓவர் அலப்பறை செய்யும் ராதாரவி.. மக்களே மறந்த நடிகருக்கு இவ்வளவு பில்டப் தேவையா!

இவரின் நக்கல் பேச்சு அந்த மேடையில் இருந்த அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும் ராதாரவி சொல்வது உண்மைதானே என பலரும் கூறி வருகின்றனர். இதற்கான காரணம் ராஜலட்சுமி இப்போது தான் வளர்ந்து வரும் பாடகியாக வளம் வருகிறார். மேலும் அவரது முகம் கதாநாயகிக்கான முகம் என்று சொல்லும் அளவிற்கு இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொன்னவுடன் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் லைசென்ஸ் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது, அதில் ராஜலக்ஷ்மி அறம் பட நயன்தாரா போஸ்டரை போலவே காட்சியளித்திருப்பார். இந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் பேசும்பொருளாக மாறிய நிலையில், ராஜலட்சுமியை அப்படத்தில் நடித்த ராதா ரவி கிண்டலாக பேசியது இன்னும் அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : தனுஷ், சிம்பு கூட இல்ல இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. அடித்து சொல்லும் ராதாரவி

- Advertisement -spot_img

Trending News