லியோ படத்தில் இத்தனை பாடல்களா?. அனிருத், லோகேஷ் போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் எதிர்பார்ப்பு இமயமலையை போல் இருக்கிறது. இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் இணையத்தில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இப்போது லியோ படத்தின் பாடல்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக லோகேஷ் தன்னுடைய படங்களில் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். அந்த வகையில் கைதி படத்தில் ஒரு பாடல்கள் கூட இடம் பெறவில்லை. முதல்முறையாக விஜய், லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்தது. விஜய் படத்தில் பாடல்கள் இல்லை என்றால் எப்படி, அதனால் மாஸ்டர் படத்தில் பாடல்கள் வைத்திருந்தார்.

Also Read : 22 வருடத்திற்கு முன்பே நடிப்பை தூக்கி எறிய முடிவெடுத்த தளபதி .. கோலிசோடா விஜய் மில்டன் கூறிய சுவாரஸ்யமான சம்பவம்

அதேபோல் விக்ரம் படத்தில் மியூசிக் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் லியோ படத்தின் பாடல்களுக்கு லோகேஷ் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். மொத்தமாக இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. அதன்படி காஷ்மீரில் ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் விஜய் மற்றும் திரிஷா இடையே ஆன ரொமான்டிக் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்ததாக இந்த படத்தில் முக்கிய குரூப் டான்ஸ் ஒன்று இடம்பெறுகிறது. மாஸ்டர் படத்திலேயே லோகேஷ் 800 டான்ஸர்களை வைத்து ஒரு பாடல் எடுத்திருந்தார். ஆனால் எல்லோரும் ஒரே ஸ்கிரீனில் இடம்பெறவில்லை.

Also Read : விஜய்யுடன் கர்ஜிக்க மட்டும் 15 கோடியா.? தலை சுற்ற வைக்கும் லோகேஷின் மாஸ்டர் பிளான்

இப்போது லியோ படத்தில் ஒரு பாடலுக்கு 2000 டான்ஸர்களை வரவழைத்து உள்ளாராம். தமிழ் சினிமாவில் மட்டும் இவ்வளவு டான்ஸர்கள் இல்லை என்பதால் மற்ற மொழி டான்ஸர்களையும் வரவழைத்து உள்ளனர். அதுமட்டும் இன்றி இவர்கள் எல்லோருமே ஒரே ஸ்கிரீனில் இடம்பெற உள்ளனராம்.

லோகேஷின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க அனிருத் இதற்கான இசையை தரமாக போட்டுக் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த படத்தை கடைசி பாடல் தான் வேற லெவலில் உருவாக இருக்கிறது. அதாவது எப்போதுமே அனிருத்தின் ஸ்டைலில் ஒரு பாடல் இருக்கும். அதேபோல் தீம் சாங் படு பயங்கரமாக உருவாக இருக்கிறதாம்.

Also Read : லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் போட்டியாளர்.. ட்வீட் மூலம் உறுதி செய்த நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்