சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாடலை பாடியது உங்கள் சூர்யா.. சொந்த குரலில் சூர்யா எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார் தெரியுமா?

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜுடன் ஒரு படத்திலே நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஆர்.ஜே பாலாஜியுடனும் இணைந்து ஒரு படம் பண்ணவிருக்கிறார்.

அந்த படத்தில் ஒரு ஆண் தெய்வமாக சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது, நடிகை த்ரிஷாவுக்கு சொன்ன கதையில் தான் இவர் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்தடுத்து தனது நடிப்பில் பல படங்களை கொடுத்து வரும் சூர்யா ஒரு சிறந்த பாடகரும் கூட. இவர் குரல் அஞ்சான் படத்தில், ஏக், தோ, தீன் சார் பாடல் வெளியாகி பயங்கர ஹிட் ஆனது. ஆனால் அந்த பாடல் மட்டுமல்ல ஏகப்பட்ட பாடலை பாடியுள்ளார் சூர்யா.

அடேங்கப்பா இத்தனை பாடல்களா?

ஆம். நிறைய பாடல்கள் சூர்யா பாடியுள்ளார். 2014ம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய ‘அஞ்சான்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன் சார்’ பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகர் சூர்யா பாடியிருப்பார். இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இந்த பாடலை தவிர, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இன்னும் வெளிவராமல் இருக்கும் படம் ‘பார்ட்டி’. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில், கார்த்தி, கரிஷ்மா ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோருடன் இணைந்து ‘சா சா சாரி’ என்ற பாடலை பாடியுள்ளார் சூர்யா.

மேலும், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூர்யா நடித்து தேசிய விருதை வென்ற ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற மாறா தீம் பாடலை தனது சொந்த குரலில் பாடியது சூர்யாதான். அதேபோல், படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ‘மகா தீம்’ பாடலை கனீர் தோணியில் பாடி பட்டையை கிளப்பியிருப்பார் நடிகர் சூர்யா. படங்களில் மட்டுமல்லாமல் Sunrise Coffee Ad-லும் சூர்யா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக விஜய் பாடல்களுக்கு ரசிகரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் சூர்யா இத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார் என்பதே பலருக்கு தெரியாது.

- Advertisement -

Trending News