சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி படம் எப்படி இருக்கு?. முழு திரைவிமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ் பொதுவாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் அவருடைய நடிப்பில் டார்க் காமெடி படமாக வெளியாகி உள்ளது சொப்பன சுந்தரி. கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற காமெடியான சொப்பன சுந்தரி என்பதை டைட்டிலாக இப்படம் கொண்டுள்ளது.

படத்தின் மையக்கருத்து என்னவென்றால் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பொருள் கிடைத்தால் அதனால் என்னென்ன பிரச்சனை சந்திக்க நேரிடும் என்பதுதான் சொப்பன சுந்தரி. அந்த வகையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

Also read: 4 வருட இடைவெளியை சரி கட்டினாரா ராகவா லாரன்ஸ்.? ருத்ரன் படம் எப்படி இருக்கு.? விமர்சனம்

வாய் பேச முடியாத தனது அக்காவிற்கு வறுமை காரணமாக திருமணம் நடக்காததை எண்ணி வருத்தப்படுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலை பார்க்கும் நகை கடையில் குலுக்கல் சீட்டு ஒன்று போடப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக கிடைக்கிறது.

இந்த காரை வைத்து எப்படியும் அக்காவின் திருமணத்தை முடித்து விடலாம் என ஐஸ்வர்யா ராஜேஷ் எண்ணுகிறார். ஆனால் அதற்குத் தடையாக ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனாக கருணாகரன் வருகிறார். கடைசியில் அந்தக் காரினால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

Also read: ஓடிடி-யின் மூலம் கவர்ச்சியில் தாராளம் காட்டும் 5 நடிகைகள்.. இளசுகளை ஜொள்ளு விட வைத்த ராதிகா ஆப்தே

மேலும் கடைசியில் கார் ஐஸ்வர்யா ராஜேஷ் கிடைக்கிறதா, அவரது அக்கா திருமணம் நடைபெறுகிறதா என்பதுதான் கிளைமேக்ஸ். டார்க் காமெடியாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சில இடங்களில் தான் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளது. மேலும் படத்தில் புதிதாக சொல்லும்படி எதுவும் அமையவில்லை.

படத்தில் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் எல்லா கதாபாத்திரத்திற்கும் சரியான நடிகர், நடிகைகளை தேர்வு செய்துள்ளார்கள். மேலும் அடுத்தடுத்து என்ன காட்சி வரும் என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கும் அளவுக்கு தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷுகாக ஒரு முறை படத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also read: தொடர் தோல்வியால் சரிந்த மார்க்கெட்.. மேடையில் அந்த இயக்குனரிடம் பகிரங்கமாக வாய்ப்பு கேட்ட நயன்தாரா

- Advertisement -

Trending News