சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எம்ஜிஆரின் அடையாளமாக மாறிய தொப்பி, வாட்ச்சின் வரலாறு.. கடைசிவரை தலையை காட்டாத புரட்சித்தலைவர்

எம்ஜிஆர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த புசுபுசு தொப்பியும், கண்ணாடியும் தான். ஒரு காலகட்டத்திற்கு பிறகுஅந்த தொப்பியும், கண்ணாடியும் இல்லாமல் அவர் வெளியில் வருவது கிடையாது. அதன் காரணமாகவே அந்த இரண்டும் அவருடைய அடையாளமாகவே மாறிப்போனது.

அந்த வகையில் அவர் இறுதி வரை அந்த தொப்பி அணிந்தபடி தான் மக்களுக்கு காட்சி தந்துள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு அந்த தொப்பியின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. முதன்முதலாக எம்ஜிஆர் எப்பொழுது இது போன்ற புசுபுசு தொப்பியை அணிய ஆரம்பித்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதாவது எம்ஜிஆர் அடிமைப்பெண் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அதன் சூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தது. அப்போது முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா எம்ஜிஆருக்கு ஒரு அழகிய பெட்டி ஒன்றை பரிசாக கொடுத்தார். அந்த பெட்டிக்குள் இருந்தது தான் எம்ஜிஆர் இறக்கும் வரை அணிந்த அந்த தொப்பி.

அதை பரிசளித்தவருக்கு கூட தெரியாது அந்த தொப்பி தான் எம்ஜிஆரின் அடையாளமாக மாறும் என்று. அவ்வளவு ஏன் எம்ஜிஆருக்கு கூட தெரியாது தான் வாழ்நாள் முழுவதும் இந்த தொப்பியை தான் அணிய போகிறோம் என்று. அந்த அளவுக்கு அந்த தொப்பி எம்ஜிஆரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது.

அந்த தொப்பிக்கு பின்னால் வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது ஜெய்ப்பூரில் அப்போது அதிகமாக வெயில் இருந்த காரணத்தினால் தான் முதல்வர் அவருக்கு இது போன்ற தொப்பியை கொடுத்ததாகவும் ஒரு தகவல் உண்டு. எது எப்படி இருந்தாலும் அதன் பிறகு எம்ஜிஆருக்கு அந்த தொப்பி தான் கூடுதல் அழகை கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

அந்த தொப்பியை பார்த்து பலரும் பாராட்டிய நிலையில் எம்ஜிஆர் அதை தொடர்ந்து அணிய ஆரம்பித்தார். இதற்காக ஒருவர் பிரத்தேகமாக எம்ஜிஆரின் இறுதி நாட்கள் வரை தொப்பிகளை தயாரித்து கொடுக்க ஆரம்பித்தார். இதில் சிறப்பு என்னவென்றால் அந்தத் தொப்பி செம்மறி ஆட்டின் முடிகளை கொண்டு தயாரிக்கப்பட்டு, மூன்று அடுக்குகளை கொண்டதாகவும், நல்ல காற்றோட்டமாகவும், வியர்வை தங்காத படியும் மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டது.

இதேபோன்று எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இன்னொரு பொருள் அவர் இறுதி வரை கட்டி இருந்த அந்த வாட்ச் தான். என்றுமே நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அந்த வாக்கியம் எம்ஜிஆருக்கு பரிசாக கிடைத்தது தான். இன்றும் கூட அவருடைய சமாதியில் மக்கள் காதுகளை வைத்து கேட்பதை நம்மால் பார்க்க முடியும். ஏனென்றால் அவர் இறந்து இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் கூட அந்த வாட்ச் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

மேலும் அந்த வாட்சில் கேமரா முதற்கொண்டு அனைத்தும் இருந்ததாம். புதுமைப் பெண் பட சூட்டிங் போது விளையாட்டாக எம்.ஜி.ஆர் அந்த வாட்ச் மூலம் சில காட்சிகளை சூட் செய்தாராம். அந்த வகையில் இந்த தொப்பி மற்றும் வாட்ச் இரண்டும் எம்ஜிஆரின் கடைசி நாட்கள் வரை கூடவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News