இப்போது உள்ள காலகட்டத்தில் லோகேஷ் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என ஹீரோக்கள் காத்து கிடக்கிறார்கள். ஏனென்றால் தொடர்ந்து இன்டஸ்ட்ரியல் ஹிட் படங்களை லோகேஷ் கொடுத்து வருகிறார். இப்போது வேறு நடிகர்கள் அவரது அருகில் கூட நெருங்க முடியாது. ஏனென்றால் அடுத்தடுத்து லைன் அப்பிள் பல படங்களை வைத்துள்ளார்.
விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களும் அடுத்தடுத்து உருவாக இருக்கிறது. மேலும் பெரிய நடிகர்களும் லோகேஷிடம் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வரலாற்று ஹீரோ ஒருவர் லோகேஷின் பட வாய்ப்பை தவற விட்டுள்ளார்.
Also Read : சைக்கோ இயக்குனரை லாக் செய்த லோகேஷ்.. மாறி மாறி புகழ்ந்து தள்ள இதான் காரணம்
அதன் பின்பு அவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் ஃபெயிலியர் ஆகிவிட்டதா ஆகவும் அதற்கு லோகேஷ் படத்தில் நடித்திருக்கலாம் என வேதனையுடன் கூறி இருந்தார். அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி. இப்போது கைவசம் நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் மிக விரைவில் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு ஜெயம் ரவி பேட்டி கொடுத்த வருகிறார். அப்போது மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் தனக்கு ஒரு கதை கூறியதாக ஜெயம் ரவி கூறியிருந்தார்.
Also Read : இப்படி செஞ்சா லியோ படத்துக்கு நல்லது இல்ல.. லோகேஷ் நிறுத்தலைன்னா பாபாவிட மோசமான தோல்வி கன்பார்ம்
அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதே ஆண்டு என்னுடைய நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. மேலும் அதன் பிறகு லோகேஷ் கைதி, மாஸ்டர் படங்களை பார்த்து அவரின் பட வாய்ப்பை தவிர்ந்து விட்டு உள்ளோமே என வருந்தியது உண்டு என ஜெயம் ரவி கூறியுள்ளார்.
ஆனாலும் இந்த வருடம் ஜெயம் ரவிக்கு நல்ல ஆண்டாக அமைய உள்ளது. ஏனென்றால் இவருடைய நடிப்பில் அடுத்தஅடுத்து நாலைந்து படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படங்களுக்காக ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Also Read : இதுவரை கெஸ்ட் ரோலில் நடிக்காத ஒரே ஹீரோ.. புது ட்ரெண்டை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ்