சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இதுவரை பட்ட அவமானங்களை சவாலாக மாற்றிய சூரி.. மனைவியவே வியக்க வைத்த செயல்

90களில் வெளியான பல படங்களில் கண்ணுக்கு தெரியாத சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக முன்னேறிய சூரி, 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா போட்டியில் பங்கேற்பது போன்ற காட்சியில் நடித்து, புரோட்டா சூரி ஆக பிரபலமானார்.

அதன் பிறகு முன்னணி நடிகர்களான தனுஷ், அஜி,த் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக சுமார் 25 படங்களுக்கு மேல் மல மலவென நடித்து முடித்த சூரி, தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படம் வரும் மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளை வைத்து சூரி ஹீரோவாக வெளுத்து வாங்கியுள்ளார் என்று, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது.

Also Read: அடுத்தடுத்து சூரிக்கு வரும் கதாநாயகன் வாய்ப்புகள்.. விடுதலைப் படத்தைத் தொடர்ந்து இனி முழு நேர ஹீரோ

ஆனால் சூரி இதுவரை பட்ட அவமானங்களை சவாலாக மாற்றிய விஷயம்
வெளியில் தெரிய வந்துள்ளது. தனக்கென ஒரு வீடு வாங்க வேண்டும் என்று பிளாட்டை வாங்க முடிவெடுத்தார். அவர் எந்த பிளாட்டை தேர்வு செய்தால் என்றால், முதல் முதலாக ஆடிஷனுக்கு சென்று மயங்கி விழுந்து அவமானப்பட்ட சாலிகிராமத்தில் இருக்கும் அந்த பிளாட்டை தான் வாங்க வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றிருக்கிறார்.

கோடிக்கணக்கில் விலை சொன்ன பிளாட் உரிமையாளர்களிடம் விலையை குறைத்துக் கொள்ளுமாறு கேளுங்கள் என்று அவருடைய மனைவி சொல்லியும் சூரி, இன்னும் இரண்டு மூன்று லட்சம் அதிகமாக கேட்டாலும் நான் கடன் வாங்கி கொடுக்க தயார் என்று கூறி உள்ளார். ஏனென்றால் இந்த இடத்தில் நான் பெரும் அவமானப்பட்டேன். அந்த இடம்தான் எனக்கு வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று வாங்கினாராம்.

Also Read: காசு கொடுத்து கூட்டத்தை சேர்த்த சூரி.. கதாநாயகனாக நடித்தால் இப்படி விளம்பரம் தேடணுமா.

எல்லா விஷயத்திலும் கஞ்ச பிசினாரியாக இருக்கும் சூரியின் இந்த செயல் அவருடைய மனைவியை வியப்பில் ஆழ்த்தியது. பிறகு வாடகை வீட்டில் இருந்து தன்னுடைய குடும்பத்துடன் அந்த பிளாட்டிற்கு சூரி குடியேறினார். அதேபோன்று ஒரு பிளாட் முன்பு தன்னுடைய மகளுடன் இணைந்து போட்டோ எடுக்கும் போது கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டி இருக்கின்றனர். அந்த இடமும் சூரி வளர்ந்த பிறகு விலைக்கு வந்திருக்கிறது. உடனே அதையும் வாங்கிய சூரி, அதை தன்னுடைய அலுவலகமாகவே மாற்றியிருக்கிறார்.

இப்படி எந்தெந்த இடத்தில் எல்லாம் சூரி அவமானப்படுத்தப்பட்டாரோ அதே இடத்தில், விடாமுயற்சி தன்னம்பிக்கையுடன் வளர்ந்து காட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு இருக்கிறார். இதைப்பற்றி தெரிந்ததும் ரசிகர்களுக்கு சூரியின் மீது தனி மரியாதையை ஏற்பட்டுள்ளது.

Also Read: வெற்றிமாறனுடைய பெரிய மைனஸ்.. தலையில் துண்டை போடவைக்கும் படுபாதக செயல்

விடுதலை படத்திற்கு பிறகு சூரி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிஎஸ் வினோத் குமார் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை குறித்த போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட்டானது. இதன் பிறகு இயக்குனர் பொன்ராம் இயக்கத்திலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

அதை தொடர்ந்து எதார்த்தமான படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ராம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் சூரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு காமெடியனாக இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் ரசிகர்களை கலகலப்பாக வைத்திருந்த சூரி, தற்போது ஆக்சன் ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் மிரட்ட காத்திருக்கிறார்.

- Advertisement -

Trending News