தேவர்மகன் கெட்டப்பில் ஹிப்ஹாப் ஆதி.. 29 வருடங்களுக்குப் பிறகு ட்ரெண்டாகும் ஹேர் ஸ்டைல்!

ஹிப்ஹாப் கலைஞராக வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற பாடல் மூலம் திரைப்படத்திற்கு அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, அதன்பிறகு ஆம்பளை திரைப்படத்தில் முதல் முதலாக இசையமைப்பாளராக பணியாற்றினார்.

பின்பு ஆதி, பாடல் பாடுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களில் இசையமைத்தும் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் வாயிலாக ஹிப்ஹாப் ஆதி இயக்குனராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

தற்போது ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான சிவக்குமார் சபதம் என்ற திரைப்படத்தின் டிரைலரை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்தனர். அதன் பிறகு ஹிப்ஹாப் ஆதி கமல்ஹாசனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஹிப்ஹாப் ஆதி ‘சிவகுமார் சபதம்’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி, தேவர்மகன் கமலஹாசன் ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

hiphop-adhi-cinemapettai
hiphop-adhi-cinemapettai

கமல்ஹாசன் தற்போது இந்தியன்2, விக்ரம் போன்ற படங்களைத் தொடர்ந்து தேவர்மகன்-2 திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இன்னிலையில் 29 வருடங்களுக்கு முன்பு தேவர் மகன் திரைப்படத்தில் கமல் வைத்திருந்த ஹேர்ஸ்டைல் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக ஒரு படம் வெளியானால் அந்த படத்தில் கதாநாயகன் எப்படி ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறாரோ, அதைப் பின்பற்றுவதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அந்த வகையில் தற்போது தேவர்மகன் ஹேர்ஸ்டைலும் ட்ரெண்ட் ஆக உள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை