பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஹிப் ஹாப் ஆதி.. PT சார் எப்படி இருக்கு.? விமர்சனம்

PT Sir Movie Review: கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள PT சார் இன்று வெளியாகி உள்ளது. அனிகா சுரேந்திரன், காஷ்மீரா, தியாகராஜன், பாக்கியராஜ், பிரபு என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரிலேயே அனைவரின் கவனத்தையும் கவர்ந்த இப்படத்திற்கு இப்போது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் ஹிப் ஹாப் ஆதிக்கு வெற்றியா? தோல்வியா? என இங்கு காண்போம்.

படத்தின் கதை

கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக இருக்கும் ஹிப் ஹாப் ஆதி எந்த வம்பு சண்டைக்கும் செல்லாதவர். அம்மாவின் கட்டாயத்தினால் அநீதி நடந்தாலும் அதை பார்த்து ஒதுங்கி போய்விடுவார்.

அந்த சமயத்தில் அவர் தன் தங்கையாக நினைக்கும் எதிர் வீட்டுப் பெண் அனிகாவுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு காரணமான கல்வி நிறுவனத்தால் அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

அது சமுதாய பிரச்சனையாக மாறும் நிலையில் ஹிப் ஹாப் ஆதி அனிகாவுக்காக நீதி கேட்டு களத்தில் குதிக்கிறார். அதில் வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

நிறை, குறை

ஹிப் ஹாப் ஆதி மெனக்கெட்டு நடித்திருந்தாலும் நடிப்பை பொறுத்தவரையில் இன்னும் பயிற்சி வேண்டும். அதேபோல் ஹீரோயின் வழக்கமான நாயகியாக வந்து போகிறார்.

ஆனால் மொத்த படத்தையும் தாங்கும் கதாபாத்திரம் அனிகாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து அவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளார். மேலும் தினந்தோறும் எல்லா பெண்களும் சந்திக்கும் ஒரு பிரச்சனையை இயக்குனர் கையில் எடுத்துள்ளார்.

அதை அவர் திரைக்கதை வழியாக கொண்டு சென்ற விதம் சிறப்பு. ஆனால் சில இடங்களில் தடுமாற்றம் இருக்கிறது. அதனாலேயே கொஞ்சம் சுவாரஸ்யமும் குறைவாக உள்ளது. ஆனால் அதை எல்லாம் தாண்டி படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5

சமீபத்தில் வெளிவந்த படங்களின் முழு விமர்சனம்

- Advertisement -