என்னது ஹிப்ஹாப் ஆதிக்கு கல்யாணம் முடிஞ்சிட்டா.? சீக்ரெட்டாக வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவிற்கு ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி இவர்களது வரிசையில் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் முதலில் அனிருத் இசையில் வணக்கம் சென்னை என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங் ஸ்டார்’ என்ற பாடல் பாடியதன் மூலம் பிரபலமானார்.

அதன் பிறகு சுந்தர் சி-யின் ஆம்பள படத்தில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து தனி ஒருவன், இமைக்காநொடிகள், அரண்மனை உள்ளிட்ட படங்களில் வரிசையாக பாடி முன்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்த ஆதிக்கு நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களில் வரிசையாக கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆதியின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். திருமண தேதியை அறிவிக்காமலே சீக்ரெட்டாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்.

adhi-cinemapettai
adhi-cinemapettai

இவருக்குத் திருமணம் ஆனது இன்றும் பல பேருக்கு தெரியாது. ஆனால் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி லக்ஷயா என்பவருடன் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

hiphop-adhi-cinemapettai6
hiphop-adhi-cinemapettai6

எனவே இவர்களுடைய திருமணம் திருப்பதி கோவிலில் உறவினர்களின் மத்தியில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றதாம். அப்பொழுது ஆதி தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் குடும்ப உறவினருடன் இருக்கும் புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக விமர்சையாக நடத்த முடியாது என்பதற்காக எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி முடித்த ஹிப்ஹாப் ஆதிக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்