ஒரு மில்லியன் வியூஸ் தாண்டி ஹிப் ஹாப் ஆதியின் சிவக்குமாரின் சபதம்.. டிரெண்டாகும் டிரெய்லர்

ஆம்பள, கலகலப்பு 2, தனி ஒருவன் போன்ற போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஹிப்ஹாப் ஆதி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையால் இளைஞர்களை கவர்ந்த இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானவர். மேலும் நட்பே துணை, நான் சிரித்தால் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு தானே இசையமைக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளார்

தற்போது இவர் இயக்கி நடிக்கும் சிவகுமாரின் சபதம் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் இவருக்குஜோடியாக மாதுரிஜெயின் நடித்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி தயாரிக்கிறார்..

இப்படத்தின் ட்ரைலர் இன்னும் வெளியாகாத நிலையில் இப்படத்தினை செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை தீம் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்து ரசிகர் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு OTT உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இரண்டாவதாக இயக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்