இந்த கேரக்டருக்கு ஹிப்ஹாப் ஆதி செட்டாக மாட்டார்.. வாரிசு நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம், வைரல் புகைப்படம்!

நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதர்வா நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான்.

குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வா நடித்திருந்த பரதேசி படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மாறுபட்ட கதாபாத்திரத்தில் அதர்வா நடித்திருந்த இப்படம் பலரது பாராட்டையும் பெற்றது.

அதேபோல் பாலா தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கிய சண்டிவீரன் படத்தில் அதர்வா நடித்து இருந்தார். இப்படம் ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க உள்ளார்கள். இயக்குனர் சற்குணம் அதர்வா இணையும் புதிய படத்தின் படத்தின் பூஜை நேற்று தொடங்கியது.

இந்த படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரண் மற்றும் ராதிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஆனால், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அதர்வா இல்லையாம்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால், ஒப்பந்தமாகி கடைசி நேரத்தில் அவர் வெளியேறியதால் அவருக்கு பதில் அதர்வா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

atharvaa-cinemapettai
atharvaa-cinemapettai

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -