வேல் படத்தை காப்பியடித்த ஹிப்ஹாப் ஆதி.. எதுக்கு தம்பி இந்த வேலை

இசையமைப்பாளர்கள் பலரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக மாறி வருகின்றனர். அந்த வகையில் சாதித்த ஹீரோக்கள் நின்று பார்த்தால் கம்மிதான். இப்போதைக்கு விஜய் ஆண்டனி மட்டும்தான் ஹீரோவாக நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மற்றபடி ஆரம்பத்தில் வெற்றி படங்கள் கொடுக்கும் சில இசையமைப்பாளர்கள் அதன் பிறகு அநியாயத்திற்கு மோசமான படங்களில் நடித்து தங்களுடைய இமேஜை இழந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களும் பேசாமல் இசையமைக்க போய்விடுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டனர்.

அந்த வரிசையில் விரைவில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இடம்பெற்று விடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம் கடைசியாக அவர் நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. அதுவும் சிவகுமாரின் சபதம் என்ற படமெல்லாம் முதல் நாள் முதல் காட்சியிலேயே தோல்வி என்ற முத்திரையை வாங்கியது.

இந்த நேரத்தில்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள அன்பறிவு என்ற படம் பொங்கலுக்கு நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

ட்ரெய்லரை பார்த்ததுமே முடிவு செய்துவிட்டனர். இதுவே வேல் படத்தின் இரண்டாம் பாகம் என்று. வேல் படத்தில் எப்படி சூர்யா நகரத்தில் இருக்கும் குடும்பத்துடன் ஒரு சூர்யாவும் கிராமத்தில் இருக்கும் குடும்பத்துடன் ஒரு சூர்யாவும் இருப்பது போலவும் பின்னர் இருவரும் மாறி வேறு வேறு இடங்களில் இருப்பது போலவும் கதை அமைக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து பிளாக்பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதே கதையை பாட்டிக்கு பதிலாக தாத்தா சென்டிமென்டை வைத்து பட்டி டிங்கரிங் செய்து உருவாக்கி விட்டனர் என்பதுதான் யோசனைக்கு வருகிறது. இருந்தாலும் திரைக்கதையில் ஏதாவது புதுமை செய்திருந்தால் மட்டுமே இந்த படம் வெற்றிபெறும் எனவும் இல்லையென்றால் ஹாட்ஸ்டார் தளத்திற்கு இந்தப் படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை