ஹிந்தி சினிமாவில் பாலின ஏற்றத்தாழ்வு.. டாப்சி ஆவேச பேச்சு.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ஆடுகளம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்த அவர் தற்போது ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘ஹசீன் தில்ருபா’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஹிந்தி திரைப்படத் துறையில் நிலவுகின்ற பாலின ஊதிய ஏற்றத்தாழ்வு மோசமானது என டாப்ஸி கூறியுள்ளார். மேலும், “ஒரு பெண் கலைஞர் அதிக சம்பளம் கேட்டால், உடனே அவரை சர்ச்சைக்குரியவர், சிக்கலானவர் என்ற முத்திரை குத்தி விடுகிறார்கள். இதுவே, ஒரு ஆண் கலைஞர் சம்பளம் அதிகமாக கேட்டால், நடிகரின் வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கொண்டாடுகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

அதேபோல், “நான் சினிமாவில் கால் பதித்தபோது என்னுடன் நடிக்க தொடங்கிய பல ஆண் நடிகர்கள் தற்போது என்னை விட 3 முதல் 5 மடங்கு வரை அதிக சம்பளம் வாங்குகிறார்கள். பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு ரசிகர்களும் காரணம். ஆண் நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள் எங்களை கொண்டாடுவதில்லை.

tapsee-cinemapettai-01
tapsee-cinemapettai-01

இதனால் தான் பெண்களை மையமாக கொண்ட படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் குறைந்த வசூல் கிடைக்கிறது” என ஆவேசமாக பேசியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்